DOCTOR
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள டாக்டர் படத்தில் நடிகர் யோகி பாபுவும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக தோன்றி தொகுப்பாளராக, காமெடி நடிகராக வலம் வந்து இன்று சினிமாவில் முன்னணி நடிகராக உச்சம் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை மெகா ஹிட் படமானது. இந்த படத்தை தொடர்ந்து பி.எஸ் மித்ரன் இயக்கியுள்ள ஹீரோ திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

அதன் பின்னர் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள டாக்டர் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் வில்லனாக நடிக்க வினய் கமிட்டாகி இருந்தார்.

வினையை தொடர்ந்து தற்போது காமெடி நடிகர் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.