ரோகினி பற்றி தெரிய வரும் அதிர்ச்சி உண்மையால் விஜயா ஏமாற உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா தன்னுடைய தங்கையுடன் கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டிருக்கிறேன் அப்பொழுது அவர் மேலும் மாமாவும் கோபக்காரங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தரை புரிஞ்சுகிட்டா நல்லபடியா இருப்பீங்க என சொல்கிறார்.

அந்த சமயம் பார்த்து சவாரிக்காக முத்து கோவிலுக்கு வர விட்டுவிடும் இவர்கள் பேச முற்றுகை தங்கச்சி அக்கா உங்கள தப்பா புரிஞ்சுகிட்டதனால மனசு கஷ்டமா இருக்குன்னு சாமிகிட்ட மன்னிப்பு கேட்க வந்தாங்க என சொல்ல பேசறது எல்லாம் பேசின என்கிட்ட தானே மன்னிப்பு கேட்கணும் சாமிகிட்ட கேட்டா எல்லாம் சரியா போயிடுமா என முத்து நக்கல் அடிக்கிறார்.

பிறகு மீனா முத்துவுக்கு விபூதி வைத்துவிட வேணாம் இப்போ விபூதி வச்சுட்டு நாளைக்கு மொத்தமா பட்டைய அடிப்பீங்க நானே வச்சிக்கிறேன் என முத்து விபூதி வைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதற்கு அடுத்ததாக ரோகிணி தன்னுடைய அம்மாவை சந்தித்து கல்யாணம் பண்ணிக்க போறேன் என சொல்ல அவர் உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கின்ற விஷயத்தை சொல்லிட்டியா என்று கேட்க ரோகினி சொல்லப் போவதில்லை என சொல்கிறார். ஏற்கனவே இவருக்கு கல்யாணம் ஆகி கணவர் இறந்து ஒரு குழந்தை இருப்பது தெரிய வருகிறது.

குடும்ப வறுமை காரணமாக இவர்கள் அம்மா வயதான ஒருவருக்கு கட்டி கொடுத்தது தெரிய வருகிறது. ஆனால் ரோகிணி இதை எதுவும் சொல்லப்போவதில்லை தெரியும் போது மன்னிப்பு கேட்டுக் கொள்ளப் போகிறேன் என சொல்லி அங்கிருந்து கிளம்பி விஜயா வீட்டுக்கு வருகிறார்.

அப்போது மீனா வீட்டை பெருக்கிக் கொண்டிருக்க ரோகினி வேலைக்காரி என நினைத்து விஜயா ஆண்டி இல்லையா என கேட்டு பிறகு ஒரு தட்டு எடுத்துட்டு வா என ஆர்டர் போட பிறகு விஜயா வந்து ரோகினியை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

பிறகு மீனா தட்டை எடுத்து வந்து கொடுக்க ரோகிணி மன்னிப்பு கேட்க விஜயா அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை கிடையாது அதுவும் ஒரு வேலை தானே, நீ உட்காரு என சொல்ல மீனா முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறார்.

பிறகு ரோகிணி மனோஜ் கட்டிக் கொள்ள சம்மதம் என சொல்லி தட்டை எடுத்து கொடுக்கிறார். இதைப் பார்த்து மனோஜூம் சந்தோஷப்படுகிறார். பிறகு அண்ணாமலை வீட்டுக்கு வர விஜயா இவர்தான் மனோஜ் அப்பா என சொல்ல ரோகிணி ஓடிப் பய் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்.

பிறகு விஜயா மனோஜ்க்கு இந்த பொண்ண தான் பார்த்திருக்கிறதா சொல்ல அண்ணாமலை அப்பா அம்மா பற்றி விசாரிக்க ரோகிணி அவர் சிங்கப்பூர்ல இருக்காரு என சொல்ல என்கிட்ட மலேசியாவில் இருப்பதா தானே சொன்ன என விஜயா மடக்கி கேள்வி கேட்க ரெண்டு இடத்திலேயும் இருப்பாரு இரண்டு இடத்திலயும் பிசினஸ் இருக்கு என சொல்கிறார்.

விஜயா கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருவாரு இப்போ உடனே அங்கிருந்து கிளம்பி வர முடியாது என சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.