
ஒரே கேள்வியில் ரோகினிக்கு ஆப்பு வைத்துள்ளார் மீனாவின் அம்மா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை விஜயாவிடம் நாலு பேருக்கும் தல தீபாவளிக்கு துணிமணிகளை வாங்கி கொடு என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயா ரவியை வீட்டிற்கு அழைப்பது பற்றி பேசுகிறார்.

மீனா தான் அவன ஏத்திவிட்டு தப்பு பண்ண வச்சா அவனுக்கும் தல தீபாவளி தானே என்ன இருந்தாலும் அவன் அந்த பையன் வீட்டுக்கு கூப்பிடலாம் என்று சொல்ல முத்து கோபப்படுகிறார். மனோஜ் அவன் வேற பணக்கார வீட்டுல பொண்ணு எடுத்து இருக்கான், அவன் இந்த வீட்டுக்கு வந்தா நமக்கு மரியாதை இருக்காது என கணக்கு போட்டு முத்து சொல்றதுதான் சரி அவன் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து மீனாவின் அம்மா வீட்டுக்கு வந்து தல தீபாவளிக்கு மீனாவையும் முத்துவையும் அழைக்க அண்ணாமலை கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். பிறகு ரோகிணியை பார்த்து உங்கப்பா மலேசியாவில் தானே இருக்காரு நீ தீபாவளிக்கு போகலையா என்று கேட்டு ஆப்பு வைக்கிறார்.

விஜயா அதெல்லாம் நீங்க எதுக்கு கேக்குறீங்க எனக்காக கோபப்பட இல்ல அங்க போகலைன்னா எங்க வீட்டு கூப்பிடலாம்னு தான் என்று சொல்ல அதெல்லாம் அங்கு வரமாட்டா என பதிலடி கொடுக்கிறார். உடனே மனம் இது நல்ல ஐடியாவா இருக்கு நாம ஏன் மலேசியா போகக்கூடாது உங்க அப்பா கூப்பிடனாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் நம்ம போயிட்டு வரலாம் என்று சொல்ல விஜயாவும் ஆமா இப்ப உங்க அப்பாவும் உன்கிட்ட நல்லா தானே பேசுறாரு மலேசியா போயிட்டு வாங்க என்று சொல்ல ரோகிணி சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்.
பிறகு விஜயா ரூமுக்கு வந்து திரும்பவும் மலேசியா போயிட்டு வாங்க என்று சொல்ல அவர் ட்ரிப் போயிருக்காரு இன்னும் மலேசியா வரல என்று சமாளித்து விடுகிறார். அதைத்தொடர்ந்து முத்து மீனா தல தீபாவளிக்கு மீனா வீட்டிற்கு கிளம்பிச் செல்கின்றனர்.
அப்பா உன்ன புடவை எடுத்துக்க சொன்னாரு இந்தா காசு என முத்து சொல்ல மீனா அவரையும் கூப்பிட நான் வரல என சொன்னதும் சரி மாமாவுக்கு போன் பண்ணி சொல்றேன் என்று மிரட்ட முத்து வந்து தொலைகிறேன் என மீனாவுடன் செல்கிறார். கடையில் சேல்ஸ்மேன் மீனாவின் மீது புடவை வைத்துக் காட்ட முத்து ஒரு கட்டத்தில் கோபப்பட்டு இந்த புடவையே நல்லா தான் இருக்கு இதை எடுத்துக்கோ என ஒரு புடவையை தேர்ந்தெடுத்து கொடுக்கிறார்.

அதன் பிறகு இருவரும் வீட்டிற்கு கிளம்பி செல்லும் போது பைனான்சியரின் ஆட்கள் குறுக்கே வந்து ஆட்டோவை நிறுத்தி இன்னும் வாடகையும் கட்டல, வட்டியையும் கட்டல அதனால அண்ணன் கார் எடுத்துட்டு வர சொன்னாரு என சொல்லி காரை எடுத்துச் செல்ல முத்து எல்லாம் உன்னால தான் என மீனாவிடம் கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.