மனோஜ் கேட்ட கேள்வி, முத்து ஜெயிலுக்கு போக காரணம் என்ன? உண்மை வெளிவருமா? சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்க போவது என்ன.!!
முத்து ஜெயிலுக்கு போன உண்மை தெரியவருமா என்று பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது அரசு மகள் திருமணத்தில் கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா என்ற பரபரப்புடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வாரம் நடக்கப் போவது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது முத்து செல்வம் மற்றும் அவரது மனைவியை வீட்டிற்கு வர வைத்து சாப்பாடு போட மனோஜ் ரூமில் கண்டவர்கள் சாப்பிடும் போது அதற்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கனுமா என்று கோபப்படுகிறார்.
ஆனால் ரூமுக்குச் சென்ற முத்து மனோஜிடம் அவங்க சாப்பிட்டு போட்டோ அதுக்கப்புறம் எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம் என்று சொல்ல மனோஜ் ஓவராக பேசி விடுகிறார். பிறகு டைனிங் டேபிளில் மனோஜ் சாப்பிட உட்கார முத்து கடுமையாக நடந்து கொள்கிறார் சண்டைகள் ஒரு கட்டத்திற்கு மேல் ஒற்றுமை பார்த்து நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்தான என்று மனோஜ் சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு மீனா உங்களை ஏன் அவரு ஜெயிலுக்கு போனாவருன்னு சொல்றாங்க என்று கேட்க, முத்து கோபமாக இருக்கிறார். முத்து என்ன காரணத்துக்காக ஜெயிலுக்கு போனார் என்று உண்மை வெளிவருமா என்பதை வரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.