சூர்யாவிற்கு தெரிந்த உண்மை, காலில் விழுந்து கெஞ்சிய மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 16-03-25
Moondru Mudichu Serial Today Promo Update 16-03-25

நேற்றைய எபிசோடில் அசோகன் அவர்களுக்கு சூர்யா கோட் பண்ண அமௌன்ட் சொல்லிவிட அவர்கள் இது போதும் என சந்தோஷப்பட்டு செல்ல மாதவி இதுக்கு அப்புறம் நம்ம யார்கிட்டயும் நகை வாங்கி கொடுங்கன்னு சொல்ல தேவையில்ல நம்மள வாங்கிக்கலாம் என்று நினைக்கிறார். பிறகு டெண்டர் நடக்கும் இடத்திற்கு சூர்யா வர கொஞ்ச நேரத்தில் அசோகனும் அந்த பிசினஸ் மேன் வருகின்றனர். ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா சூர்யா என்று கேட்க எதுவும் பண்ண வேணாம் நீங்க அமைதியா இருங்க அதுவே போதும் என்று சொல்லுகிறார் நான் பண்ண வேண்டியது எல்லாத்தையும் பண்ணிட்டேன் என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் வருஷ வருஷம் நம்ம இந்த ஆர்டர் கொடுத்துக்கிட்டு இருக்கோம் இந்த வருஷம் 5 லட்சம் குக்கர் ஆர்டர் கொடுக்க போறோம் அவங்க அவங்க ஷீல்ட் இந்த பாக்ஸ்குள்ள போடுங்க என்று சொல்ல அனைத்து கம்பெனிக்காரர்களும் அவரவர்களது பேப்பரை உள்ளே போடுகின்றனர்.

சூர்யாவும் அவரது டெண்டர் அமௌன்ட் பாக்ஸில் போட பிறகு ஒரு ஒரு பேப்பராக எடுத்து அவர்களது கம்பெனி பெயரையும் அவர்கள் எழுதி இருக்கும் கோட் அமௌன்ட்டையும் வரிசையாக சொல்லிக் கொண்டு வர சூர்யாவின் கம்பெனி பெயரை சொல்ல அசோகன் இருப்பதிலேயே நீ தான் மாப்பிள கம்மியா கோட் பண்ணி இருக்க உனக்கு தான் கிடைக்கும் என்று சொல்ல அடுத்ததாக அசோகன் சூர்யாவின் கோட் அமௌன்ட் சொன்ன நபரின் கம்பெனி பெயரை சொல்ல அவர்கள் சூர்யாவை விட வெறும் பத்து ரூபாய் குறைவாக போட்டு இருக்க இந்த டெண்டர் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

இதனால் டென்ஷன் ஆகி சூர்யா அங்கிருந்து கிளம்ப வந்த பிசினஸ்மேன் அங்கு இருக்கும் ஃபார்மாலிட்டி முடித்துக் கொள்கிறார். மறுபக்கம் வீட்டில் கிச்சனில் நந்தினி வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் ஐயா ஆரத்தி தட்டு கரைத்து வைக்க சொல்லி இருக்காரு என்று சொல்ல எதுக்கு என்று கேட்கின்றனர் என்னம்மா ஐயா ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்பதான் பிசினஸ் பக்கம் போயிருக்காரு அவர் எப்படியோ ஜெயிச்சுடுவார் என்று சொல்ல ஜெயிச்சா சந்தோஷம்தான் அண்ணே என்று சொல்லுகிறார்.

இதுக்கெல்லாம் காரணம் நீ தாம்மா என்று சொல்ல ஐயாவும் அது தான் சொல்றாரு ஆனா நீங்களும் அது தான் சொல்றீங்க இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி ஆரத்தி தட்டை ரெடி பண்ணுகின்றனர். சோபாவில் சுந்தரவல்லி மாதவி மற்றும் சுரேகா மூவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க சுந்தரவல்லி உங்க அப்பா எங்க என்று கேட்க பட்டாசு ரெடி பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்லுகிறார். அதற்கு சுந்தரவல்லி இவர் எதுக்கு தேவையில்லாம இந்த வேலையை பார்த்துக்கிட்டு இருக்காரு அந்த டெண்டர் நமக்கு கிடைக்க போவது கிடையாது என்று சொல்ல அதற்கு மாதவி உங்களை எதிர்த்து பேசிட்டு போனாலும் வந்து அசிங்கப்படுவான் என்று சொல்ல அவனை போய் எதிரி மாதிரி பேசிக்கிட்டு இருக்க அவன் உன்னோட தம்பி தான அவன் அசிங்கப்பட்டா நம்ம அசிங்கப்படுற மாதிரி தானே நான் வேணான்னு சொன்னதை எதுக்கு செய்யணும் என்று பேசிக்கொண்டிருக்க அருணாச்சலம் வெளியில் பட்டாசு ரெடி பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறார். உடனே நந்தினி மற்றும் கல்யாணம் ஆரத்தி தட்டு ரெடி பண்ண சூர்யா காரில் வந்து இறங்கியவுடன் பட்டாசு வெடிக்கின்றனர். பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு மூவரும் வெளியில் வருகின்றனர்.

உடனே ஆரத்தி தட்டை நந்தினி சுத்த சூர்யா வேகமாக தட்டி விட்டு கோபப்பட,சுந்தரவல்லி அப்போ அங்க நினைச்ச மாதிரி நடந்து இருக்காது என்று சொல்லுகிறார் உடனே அருணாச்சலம் என்னாச்சு சூர்யா என்று கேட்க அதற்கு அவர் டெண்டர் நமக்கு கிடைக்கல டாடி என்று சொல்லுகிறார் எப்படியாவது நீ எடுத்துருவேன்னு நினைச்சேன் என்று சொல்ல இல்ல டாடி நான் கோட் பண்ண அமௌன்ட் விட வெறும் பத்து ரூபாய் வெறும் பத்து ரூபாய் டாடி கம்மியா வச்சு டெண்டர் எடுத்துட்டாங்க என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாம கண்டிப்பா யாரும் என் அமௌன்ட் தெரிஞ்சு இதை கோட் பண்ணி இருக்காங்க என்று டென்ஷனாக பேச உடனே சுந்தரவல்லி நான் தான் கிடைக்காதுன்னு சொன்னேன்ல ஆனா ஓவரா கத்திட்டு திமிரு இல்ல ஆடுனா இப்படித்தான் என்று சூர்யாவை கடுப்பேத்தி பேசுகிறார்.

உடனே அருணாச்சலம் அவனே வெறுப்பில் இருக்கான் வெந்த புல்லுல வேலை பாக்குற மாதிரி எதுக்கு பேசுற என்று திட்டி விட்டு சூர்யாவை உள்ளே போக சொல்லுகிறார் பிறகு அனைவரும் வீட்டுக்குள்ளே சென்ற பிறகு ரேணுகா அர்ச்சனாவிற்கு ஃபோன் போட்டு சூர்யா சார் டெண்டர் கிடைக்கின்ற கோவத்துல இருக்காரு யாரோ இதை பண்ணி இருப்பாங்க என்று சந்தேகப்படுகிறார் என்று சொல்ல ஓ அப்படியா இந்த விஷயத்திலேயே இன்னும் குட்டைய குழப்பினால் நல்லா இருக்குமே என்று சொல்லி நான் உனக்கு சொல்றேன் என போனை வைக்கிறார். வீட்டுக்குள் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யா டென்ஷனாக எங்கும் அங்கும் நடந்து விட்டு யாரோ வேணும்னே என்னோட அமௌன்ட் போர்ட் தெரிஞ்சுக்கிட்டு பத்து ரூபா கம்மி பண்ணி இருக்காங்க டாடி என்று டென்ஷனாக பேசுகிறார் யாரோ வேண்டுமென்றே பண்ணி இருக்காங்க என்று சொல்லி சுந்தரவல்லி பார்க்க, நீ என்னடா என்ன அப்படி பார்க்கிறாய்? நீ பார்க்கிறத பார்த்தா நான் என்னமோ ஆள வச்சு பண்ண மாதிரி பேசிக்கிட்டு இருக்க என்று சொல்லுகிறார். உடனே மாதவி இந்த விஷயத்தை அதிகமா பேசினா நம்ப மாட்டிப்போம் என சொல்லிக் கொண்டிருக்க மறுப்பக்கம் நந்தினிக்கு ஒரு போன் கால் வருகிறது சூர்யா சாரோட வைஃப் நந்தினி தான நீங்க என்று கேட்க ஆமா நான் நந்தினி தான் என்று சொல்ல சூர்யா சாருக்கு ஒரு கிப்ட் வந்து இருக்கு நீங்க வந்து வாங்கி இருக்கீங்களா என்று கேட்க ஏன் அவர்கிட்டே கொடுக்க வேண்டியது தானே என்று கேட்கிறார் சார் போன் எடுக்கல அது தான் என்று சொல்ல சரி எங்க இருக்கீங்க என்று கேட்க வெளியே தான் இருக்கோம் என்று சொல்ல நந்தினி வெளியில் போகிறார்.

உடனே மாதவி சரி இதோட விட்டுடு சூர்யா என்று சொல்ல அப்படி எல்லாம் விட முடியாது நான் கோட் பண்ண அமௌன்ட் யார் யாருக்கெல்லாம் தெரியும் யார் மூலமா அது போயிருக்கு என்பதை கண்டுபிடிக்காம விட மாட்டேன் என்று சொல்ல உடனே சுந்தரவல்லி அப்பா சாமி தயவு செய்து கண்டுபிடி இல்லன்னா என்னால தானே சொல்லிடுவான் என்று சொல்ல மறுபக்கம் நந்தினி கிப்ட் பார்சல் வாங்குகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி வாங்கி வந்த பார்சலை சூர்யாவிடம் கொடுக்க சூர்யா அதைப் பிரித்துப் பார்க்கிறார். அதில் தங்க காசுகளுடன் ஒரு லெட்டர் இருக்கிறது. சூர்யா அதை படித்துப் பார்க்க அசோகன் சார் நீங்க மட்டும் ரிஸ்க் எடுத்து இந்த ஹெல்ப் பண்ணலனா எங்களுக்கு இந்த டெண்டர் கிடைச்சிருக்காது என்று அதில் எழுதி இருக்கிறது.

உடனே சூர்யா அசோகனை அறைந்து எங்க போனாலும் மாமா மாமா என்று கூப்பிட்டுகிட்டு அலைஞ்சனே அதுக்கு நீ காற்ற மரியாதை இதுதானா என்று கேட்டு கோபப்படுகிறார். உடனே இந்த துரோகிங்க ரெண்டு பேரும் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது என்று சூர்யா முடிவெடுக்க மாதவி சூர்யாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறார். சூர்யா எடுக்க போகும் முடிவு என்ன என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 16-03-25
Moondru Mudichu Serial Today Promo Update 16-03-25