ஏ ஆர் ரகுமான் எப்படி இருக்கிறார்? அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!
ஏ.ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று இரவு ரொம்ப நேரம் தூக்கம் வராமல் இருந்ததாகவும் பிறவி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் வாய்வு பிரச்சினையாக இருக்கும் என ஜெலிசில் மாத்திரை போட்டு தூங்கிய பிறகும் பிரச்சனை சரியாகவில்லை என சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து தற்போது காலை அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த பிறக மறுத்தவர்கள் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர் அதில் ஏ ஆர் ரகுமானுக்கு நீரிழப்பு தொடர்பான அறிகுறிகள் இருந்ததாகவும் வழக்கமான பரிசோதனை முடிந்த பிறகு அவர் கிளம்பியதாகவும் சொல்லியுள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் அவரது மகன் அமீன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அன்பான ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் நலம் விரும்பிகள் என அனைவருக்கும் உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகள். நீரிழப்பு காரணமாக தந்தை சற்று பலவீனமாக உணர்ந்தார் எனவே நாங்கள் முன்னோக்கிச் சென்று சில வழக்கமான சோதனைகள் செய்தோம் தற்போது நன்றாகவே இருக்கிறார் உங்கள் அன்பான வார்த்தைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.
இதனால் ஏ ஆர் ரகுமான் நலமுடன் இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
