Pushpa 2

மனோஜ்க்கு கிடைத்த பெரிய ஆஃபர்.. முத்து கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ்க்கு ஆஃபர் கிடைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி மற்றும் விஜயா மூவரும் வீட்டுக்குள் நுழைய முத்து ஒரு பெண்ணை கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்பது போல மீனா திரும்பி நிற்க மனோஜ் அதிர்ச்சியாகி உடனே விஜயா மற்றும் ரோகினி சீக்கிரமாக வாங்க இவன் ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து நடு வீட்டுல என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் பாருங்க என்று சொன்னவுடன் விஜயா யார்டா இது எதுக்குடா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க விளம்பரத்துக்காக மாடல கூட்டிட்டு வந்து இருக்கேன் என்று சொல்லுகிறார் இதெல்லாம் பார்த்தா மீனா எப்படி பேசுவான் என்று தெரியும் இல்ல மீனா மீனா என்று கத்துகிறார். முத்து மீனாவை பேச விடாமல் இருக்க பிடித்துக் கொள்ள ஒரு கட்டத்திற்கு மேல் மீனா திரும்பி விடுகிறார். விஜயா மீனாவை பார்த்து ஆச்சரியப்பட்டு நிற்க முத்து உன் மேல இவ்வளவு அக்கறை பத்தியா என்று கேட்கிறார். உடனே விஜயா சமாளித்துவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update

மறுபக்கம் ரோகினி பணத்தை எடுத்துக்கொண்டு சிட்டி இடம் வந்து கொடுத்துவிட்டு இனிமே உனக்கு பிஏ வால பிரச்சனை இருக்காது என்னால தான் என்று சொல்ல என்ன என்று ரோகினி கேட்க அதுக்குள்ள நான் தான் பி ஏ வை உன் பக்கம் வர விடாம பண்ணிடுவல்ல என்று சொல்லுகிறார். அங்கிருந்து ரோகினி கிளம்பியவுடன் பிஏ விடம் சென்ற சிட்டி பணத்தை கொடுத்து விட்டதாக சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார். பிறகு அவரிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து எங்கேயாவது வெளியில போய் சுத்திட்டு நான் சொல்லும் போது வா ரோகிணி தங்க முட்டை போடுற வாத்து ஒரேடியா அவளை வெட்டக்கூடாது தேவைப்படும்போது முட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு நான் சொல்லும்போது ரெண்டு மாசம் கழிச்சு வா என்று அனுப்பி வைத்து விடுகிறார்.

மனோஜம் ரோகிணியும் காரில் வந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சந்தோஷி கால் பண்ணுகிறார். டீலர்ஷிப் விஷயமாக பேசிவிட்டு உங்களோட ஷோரூம்க்கு ஒரு விளம்பரம் ரெடி பண்ணனும் என்று சொல்ல அதற்கு தான் சார் நானும் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ஆனா கைல அந்த அளவுக்கு பட்ஜெட் இல்லை என்று சொல்ல அதைப்பற்றி நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் தீபிகா படுகோனே, கியரா அத்வானி, என எந்த நடிகையை இறக்கலாம் சார் என்று எல்லாம் கேட்கிறார்.

அதற்கு சந்தோஷி அதெல்லாம் வேண்டாம்,அதற்கான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியாச்சு உங்க வீட்ல இருக்கிற எல்லாரையும் வச்சு தான் அந்த விளம்பரம் எடுக்க போறோம் என்று சொல்ல மனோஜ் ஸ்ருதி ரவி ஓகே ஆனா முத்துவுக்கு மீனாவுக்கும் நடிக்க வராது என்று சொல்ல அவர் தான் நேச்சுரலா இருக்காரு அவர்தான் முக்கியம் என்று சொல்லிவிடுகின்றனர் இது மட்டும் இல்லாமல் நீங்கள் சும்மா எல்லாம் நடிக்க வேணாம் ஒரு ஆளுக்கு 25000 ன்னு சொல்லி நாலு பேருக்கு இரண்டு லட்ச ரூபாய் அனுப்பிட்ட உங்க அக்கவுண்டுக்கு என்று சொல்ல மனோஜ் உடனே சந்தோஷப்பட்டு சம்மதித்து விடுகிறார். பிறகு மனோஜ் போனை வைத்துவிட எல்லாம் ஓகே தான். ஆனா இந்த முத்து மீனாவின் சொல்லும்போது தான் எரிச்சலா இருக்கு என்று சொல்லுகிறார் பரவால்ல விடு மனோஜ் இது நம்மளுக்கு எவ்வளவு பெரிய ஆஃபர் என்று சொல்லி ரோகினி சந்தோஷப்படுகிறார். ஆனால் மனோஜ் இந்த பணத்தை கொடுத்த விஷயம் அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல பிறகு தெரிஞ்சா கஷ்டமாயிடும் மனோஜ் என்று ரோகினி சொல்லுகிறார். அதெல்லாம் தெரியாம பாத்துக்கலாம் அம்மாவுக்கு வேணா பத்தாயிரம் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார்.

மனோஜ் வீட்டில் வந்து நடந்த விஷயங்களை சொல்ல அனைவரும் சந்தோஷப்பட்டு வாழ்த்து சொல்லுகின்றனர் பிறகு மீனா எந்த சினிமா நடிகர்கள் வராங்க என்று கேட்க ஸ்ருதியும் நம்மளும் போய் ஷூட்டிங் பாக்கலாம் இல்ல என்று கேட்கிறார். ஆனால் மனோஜ் நீங்க எல்லாம் வந்தா தான் ஷூட்டிங் நடக்கும் என்று சொல்லுகிறார். உங்கள தான் நடிக்க சொல்லி இருக்காரு என்று சொல்ல அதெல்லாம் நமக்கு எப்படி வரும் என்று அண்ணாமலை, விஜயா கேட்கின்றனர். பிறகு சுருதி சரியென சொல்லுகிறார்.

முத்து, மீனாவும் சம்மதிக்கிறார்களா? அதற்கு மனோஜ் பதில் என்ன? விஜயா என சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update