விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோபி, பாக்கியாவிற்கு எதிராக ஈஸ்வரி ,செழியன், இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
கோபியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியை விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸ் கூப்பிடுகின்றனர். ஆனால் கோபி வர மறுக்க ராதிகாவின் அம்மாவும் அனுப்ப முடியாது நான் எங்க தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறோம் என்று சொல்ல யாரா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க இப்ப வாங்க என்று தெருவரை அழைத்து வந்து விடுகின்றனர்.
தெருவில் உள்ள அனைவரும் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருக்க பாக்யா மற்றும் செல்வி இருவரும் வேடிக்கை பார்க்கின்றனர். எவ்வளவு பேசியும் போலீஸ் சம்மதிக்காததால் அந்த நேரம் பார்த்து செழியன் வந்து இறங்க என்னாச்சு இங்க இருக்கீங்க என்று கேட்க பாக்யா நின்னு பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து செழியன் ஓடிப் போய் கோபியிடம் என்னாச்சுப்பா என்று கேட்கிறார் அந்த கறி விஷயத்துல பாக்கியா என் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கா என்று சொல்ல செழியன் ஓடி வந்து பாக்யாவிடம் எதுக்குமா அப்படி பண்ணீங்க என்று கேட்க பாக்யா எதுவும் பேசாமல் இருக்கிறார் பிறகு உள்ளே ஓடிச்சென்று ஈஸ்வரியிடம் சொல்லி வெளியே கூட்டி வருகிறார்.
ஈஸ்வரியும், ஜெனியும் வந்து வெளியே பார்க்க மீண்டும் கோபியிடம் வந்த செழியன் அப்பாவை விட்டுருங்க என்று சொல்ல எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசிக்கோங்க என்று சொல்லிவிட்டு அவரை ஜீபில் ஏற்ற நின்றதால் கோபி செந்திலை பார்த்துவிட்டு ஒரு அட்வகேட்டுடன் ஸ்டேஷனுக்கு வா என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி கிளம்பி விடுகிறார்.
பிறகு பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் உங்க வீட்டுக்கு என்ன போலீஸ் அப்பப்ப வந்து போறாங்க உங்களுக்காக ஒரு போலீஸ் ஸ்டேஷனை பக்கத்துல கட்டிடுவாங்க போல இருக்கு என்று பேசுகின்றனர். உடனே பாக்யா பேசறதெல்லாம் பேசிட்டீங்களா உங்க வீட்ல என்ன பிரச்சனை நடக்குதுன்னு எல்லாம் எனக்கு தெரியும் அத பத்தி நான் உங்ககிட்ட கேட்கிறேன் கேட்கல இல்ல போய் உங்க வேலைய பாருங்க என்று அவர்களே சொல்லி அனுப்பி விடுகிறார். பிறகு ராதிகாவின் அம்மா நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க என்று சாபம் விடுகிறார். பிறகு பாக்கியா தலையாட்டி விட்டு வேகமாக உள்ளே சென்றுவிட குடும்பத்தினர் அனைவரும் உள்ளே வருகின்றனர்.
செல்வியிடம் ரெஸ்டாரண்டுக்கு லேட்டா வருவேன் என்று சொல்லிடு என்று சொல்லிவிட்டு செல்ல செழியன் நிற்க வைத்து எதற்காக இப்படி பண்றீங்க என்கிட்ட கூட எதுவுமே சொல்லலையே என்று கேட்கிறார் உன்கிட்ட சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும் என்று கேட்டுவிட்டு இத்தனை நாளா ஏதோ மிரட்டறது சாபம் விடுவது என்று போனால் போதும்னு இருந்தா, பிரியாணில கெட்டுப்போன கரிய போட்டு இருக்காரு,
அன்னைக்கு யாராவது அதை சாப்பிட்டு இறந்திருந்தால் என்ன ஆயிருக்கும் நான் ஜெயில்ல போய் உட்கார்ந்து இருப்பேன். அப்ப அது நடந்தா சந்தோஷமா? ரெஸ்டாரன்ட் அடிச்சு ஒடச்சிருப்பாங்க என்றெல்லாம் பேச அந்த நேரம் பார்த்து எழிலும் அமிர்தாவும் வருகின்றனர். உடனே செல்வி உன்ன அன்னைக்கு ரோட்ல பேசும்போதே ஈவ்டீசிங் என்று கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தா என்னைக்கு இவ்வளவு தூரம் போய் இருக்காதுகா என்று சொல்ல ஈஸ்வரி வாய மூடுடி என்று கத்துகிறார்.
இருந்தாலும் நீ கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கக்கூடாது பாக்கியா. என்று ஈஸ்வரி சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார். இருந்தாலும் நீ அவனை திட்டி மிரட்டி இருக்கலாம் புத்திமதி சொல்லி இருக்கலாம் என்று சொல்ல செழியன் எங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என்று சொல்ல இனியா உனக்கு வேணா டாடி முக்கியம் இல்லாம இருக்கலாம் ஆனா எங்களுக்கு முக்கியம் என்று சொல்லுகிறார். உடனே எழில் ஈஸ்வரியிடம் நீங்க ஜெயிலுக்குப் போகும்போது உங்க பையன் மேல கோபம் இருந்துச்சு இன்னைக்கு அவர் போகும்போது கோபம் போயிடுச்சா என்று கேட்கிறார். அவர் ஜெயிலுக்கு போறது தான் கரெக்ட் வெளியே இருந்தா இருக்கிறவங்களுக்கு தான் ஆபத்து என்று சொல்லுகிறார் எழில்.
உடனே செழியன் உனக்காக உன் ஆம்பிஷன்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு அந்த வாய்ப்பு வாங்கி கொடுத்தா நீ அவர் எப்படி பேசிகிட்டு இருக்க என்று சொல்ல நீ வேணா செலவச்சு கூட கொண்டாடு என்று சொல்ல வெப்பேன் என்று செழியன் சொல்லுகிறார். இதைப் பார்த்து பாகியா அதிர்ச்சியாகி நிற்க, நீ என்ன வேணா கம்ப்ளைன்ட் கூடுமா என்று பாக்யாவிடம் சொல்ல அதற்கு செழியன் என்னடா அம்மா மேல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி பேசுற என்று சொல்ல அக்கறை இருக்குதான் என்று சொல்கிறார் உனக்கு தான் எவ்வளவு அக்கறை என்று தெரியுமே பட பூஜைக்கு கூட நீ அம்மாவை கூப்பிடல என்று சொன்ன உடனே எழில் நடந்தது என்னன்னு தெரியாம பேசிக்கிட்டு இருக்காத தியாகி கோபிநாத் தான் நான் அம்மாவை பட பூஜைக்கு கூப்பிடாததற்கு காரணம் என்று எழில் சொல்லுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
எழில் என்ன சொல்லுகிறார்? அதற்கு குடும்பத்தாரின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.