சூர்யாவிடம் நந்தினி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் உங்க அம்மாவை வெறுப்பேத்த நீங்க பண்ற ஒன்னு ஒன்னு எரிச்சலா இருக்கு என்று சூர்யாவிடம் நந்தினி சொல்லுகிறார்.
சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் இவளுக்கு பிடிக்கலன்னா இவளை இந்த வீட்டை விட்டு விட்டு போக சொல்லுங்க கெட் லாஸ்ட் என்று கத்தி சொல்லுகிறார். பிறகு நந்தினி சூர்யாவின் நண்பர் மனைவிக்கு போன் போட்டு நடந்ததை நினைத்து அழறதா இல்ல நடக்க போறது நினைச்சு அழறதா எனக்கு ஒண்ணுமே தெரியல ஒவ்வொரு நிமிஷமும் பயமா இருக்கு அக்கா என்று சொல்லி அழுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.