வருத்தத்தில் மீனா, சந்தோஷத்தில் விஜயா, ஸ்ருதிக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனா வருத்தத்தில் இருக்க, விஜயா சந்தோஷமாக இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சிந்தாமணி விஜயாக்கு போன் போட்டு இனிமே மீனா இந்த தொழில் பக்கமே வரமாட்டா என்று சொல்ல விஜயாவிற்கு ஒன்றும் புரியாமல் இருக்கிறார் அவளுக்கு ரெண்டு லட்சம் நஷ்டத்தை உருவாக்கிட்ட அவ இன்னைக்கு அழுதுகிட்டே தான் வீட்டுக்கு வருவா இதுக்கு அப்புறம் வீட்டுக்குள்ளே தான் நீங்க சொல்ற வேலைய செஞ்சுகிட்டு இருப்பா என்று சொல்ல அந்த நஷ்டம் எப்படி வந்தது என்று சொல்லுங்கள் என்று சொல்ல அதெல்லாம் அப்புறம் சொல்றேன் என சொல்லுகிறார் உடனே விஜயா எது எப்படியோ அவ ரெண்டு லட்சம் நஷ்டாயிட்டா எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா அவ பணம் சம்பாதிச்சா மதிக்கவே மாட்டேங்குற என்று சொல்லி போனை வைக்கிறார்.
உடனே ரவிக்கு போன் போட்டு இன்னைக்கு வீட்ல எதுவும் சமைக்க வேணாம் நீ ரெஸ்டாரண்ட்ல இருந்து விதவிதமா சாப்பாடு எடுத்துகிட்டு வா அது மட்டும் இல்லாம நீ ஸ்பெஷலா ஒரு ஸ்வீட் பண்ணுவ இல்ல அதுவும் எடுத்துகிட்டு வா என்று சொல்ல என்னம்மா ஆச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல என்று சொல்ல மீனா அண்ணி வேற சமைப்பாங்களே வேஸ்ட் ஆயிட போகுது என்று கேட்க அவளை சமைக்க மாட்டா நான் சொல்லிக்கிறேன் நீ எடுத்துட்டு வா என்று சந்தோஷமாக பேசி வைக்கிறார். உடனே சுருதி வந்து ரவியிடம் ஆர்டர் கொடுக்க ரவி என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்க என்னடா யோசிச்சுகிட்டு இருக்க என்று கேட்கிறார் இல்ல இன்னைக்கு அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க அதுவே இல்லாம ரெஸ்டாரண்டில் இருந்து ஃபுட் எடுத்துக்கிட்டு வர சொல்றாங்க என்று சொல்ல உடனே ஸ்ருதி கொஞ்ச நேரத்தில் அவங்க சந்தோஷமா இருக்காங்கன்னா முத்துவுக்கும் மீனாவுக்கு ஏதோ பிரச்சனை என்று அர்த்தம் என சொல்ல ரவி நீ இப்படி சொல்றதுக்கு நான் உன் மேல கோவம் தான் படனும். ஆனா நீ சொல்றது கரெக்ட் தான் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் மீனா மண்டபம் ஓனர் வீட்டுக்கு சென்று மேனேஜர் ஏமாற்றிய விஷயத்தை சொல்ல அவர் மேனேஜரை கூப்பிட்டு விசாரிக்கிறார் ஆனால் அந்த மேனேஜர் வழக்கம் போல் நான் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிட்டு பணத்தை கொடுத்துட்டேன் இந்த பொண்ணு ஏமாத்துது அவன் புருஷன் ஒரு குடிகாரன் அவன் எடுத்துட்டு போய் செலவு பண்ணிட்டு திருப்பி நம்ம கிட்ட வந்து காசு கேக்குறாங்க என்று சொல்ல அந்த மண்டபத்தின் ஓனர் எதுவும் பேசாமல் காரில் ஏறி சென்று விடுகிறார் மீனா அவரிடம் எவ்வளவு கெஞ்சியும் மீனாவிற்கு அங்கு பணம் கிடைக்காமல் போகிறது.
வீட்டில் விஜயா சந்தோஷமாக சிரித்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார் ரவி வருகிறார். என்னம்மா விஷயம் சந்தோஷமா இருக்கீங்க என்று சொல்ல அது எப்படியாவது ஒருவாட்டி அப்படித்தானே இருக்கும் என்று சொல்லி அனைவரையும் சாப்பிட கூப்பிட்டு சாப்பிட உட்காருகிறார் அந்த நேரம் பார்த்து மீனா வருத்தத்துடன் வீட்டுக்கு வர சுருதி மீனாவிடம் வாங்க சாப்பிடலாம் எல்லாரும் கூட ரெஸ்டாரண்டில் இருந்து ஃபுட் எடுத்துட்டு வந்திருக்கோம் என்று சொல்ல எனக்கு வேணாம் சுருதி நீங்க போய் சாப்பிடுங்க என்று சொல்லி மீனா சோகமாக இருக்கிறார் என்ன ஆச்சு டயர்டா இருக்கீங்க என்று சொல்ல வேலை செஞ்சது வேற ஒன்னும் இல்ல என்று சொல்லி சமாளித்து விடுகிறார் உடனே அனைவரும் உட்கார்ந்த சாப்பிட மீனா ஒரு பக்கம் வருத்தத்தில் இருக்கிறார்.
அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்து போக ரோகிணி மீனாவை பார்த்து சந்தேகப்பட்டு என்னாச்சு என்று கேட்க விஜயா சிந்தாமணி மீனாவை ஏமாற்றிய விஷயத்தை சொல்லுகிறார்.உடனே ரோகினி இவங்க ரொம்ப பொல்லாதவங்களா இருப்பாங்க போல ஒன்னும் செய்யாத மீனாவை இவ்வளவு பாடுபடுத்துறாங்க நம்ம விஷயம் எல்லாம் தெரிஞ்சா அவ்வளவுதான் என்று மனதில் நினைக்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து சுருதி மீனாவிடம் வந்து என்ன பிரச்சனை என்று விசாரிக்க அவரிடம் மீனா எதுவும் சொல்லாமல் மறுத்து விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது? மீனா என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
