செல்வி வீட்டுக்கு சென்ற பாக்யா, ஆகாஷ் செய்த சத்தியம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
செல்வி வீட்டிற்கு பாக்யா செல்ல, ஆகாஷ் சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு கிளம்ப ஈஸ்வரி நீ ஒன்னும் ரெஸ்டாரண்டுக்கு போக வேண்டாம் அப்படி போய் போய் தான் எந்த அளவுக்கு வந்து நின்னு இருக்கு கோபி ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொல்லி இருக்கான் அவன் போகட்டும் நீ வீட்டிலேயே இரு என்று சொல்ல பாக்கியா பேசி முடிச்சிட்டீங்களா என்று கேட்கிறார். இப்ப நடந்த விஷயத்துக்கு அப்பா அம்மா இரண்டு பேருமே தான் காரணம் அவர் நல்ல மார்க் எடுக்கும் போதும் அவ ஜெயிக்கும் போது மட்டும் என் பொண்ணுன்னு சொல்றவங்க இந்த விஷயத்துல மட்டும் பங்கு எடுத்துக்க மாட்டாங்களா அவளுக்கு என்ன சொல்லனுமோ எல்லாத்தையும் நான் சொல்லி இருக்கேன் இந்த பிரச்சனை நடந்திருச்சு இதை எப்படி சரி பண்ண முடியுமோ என்னால முடிஞ்ச அளவுக்கு நான் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் என்று சொல்லுகிறார்.
உடனே அங்கிருந்து கிளம்பி வெளியே வந்து எழிலை கூப்பிட்டு நான் அவகிட்ட பேசி இருக்கேன் எழில் இனியாவ ஜெனியையும் அமிர்தாவையும் பார்த்துக்க சொல்லி இருக்கேன் நீயும் அவ கிட்ட ஏதாவது பேசு உன்கிட்ட அவ மனசு விட்டு பேசுவா என்று சொல்லிவிட்டு போக நீயும் பாட்டி சொன்னது எதுவும் பெருசா எடுத்துக்காதம்மா நீ பத்திரமா போயிட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். அங்கிருந்து பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அங்கு வேலை செய்யும் பெண்கள் பெரிய பிரச்சனைன்னு சொன்ன பாக்யா அக்கா ரெஸ்டாரன்ட் வந்திருக்கு என்று பேச இது மட்டும் இல்லாமல் செல்வி பையன் இப்படி பண்ணி இருக்கக் கூடாது என்று பேசி கொள்கின்றன.
கொஞ்ச நேரத்தில் பாக்கியா ஒரு மளிகை சாமான் லிஸ்ட் கொடுத்து செல்வி கிட்ட கொடு வாங்கிட்டு வந்துருவா என்று சொல்லி கொடுத்து விட, மறுபக்கம் வேலை பார்த்துக்கொண்டு செல்வி செல்வி என கூப்பிடுகிறார் செல்வி வேலைக்கு வராததை பிறகுதான் பாக்யா உணர்கிறார். பிறகு அங்க இருப்பவர்கள் செல்வி அக்கா வேலைக்கு வர மாட்டாங்களா என்று கேட்க நீங்களா வேலைய பாருங்க நான் வரேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.
மறுபக்கம் ஆகாஷ் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க செல்வி தரையில் படுத்து கொண்டு அழுது கொண்டே இருக்கிறார். ஆகாஷ் செல்வியிடம் வந்து நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடல ஏதாவது கடையில வாங்கிட்டு வரவா என்று கேட்க விஷம் வாங்கிட்டு வா செத்து போயிடுவேன் என்று சொல்ல இப்படி எல்லாம் பேசாதம்மா என்று சொல்கிறேன். நடந்ததை எல்லாம் நினைச்சா என் நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கு என்று சொல்ல ஆகாஷ் சாரிமா என்ன மன்னிச்சிடு என்று சொல்ல பாக்கியா வாசலில் வந்து நின்று செல்வியை கூப்பிடுகிறார்.
ஓடி வந்தா செல்வி இப்படி நடக்கணும் எனக்கு தெரியாது அக்கா. எனக்கு இத பத்தி கொஞ்சம் விஷயம் தெரிஞ்சி இருந்தாலும் இவனை வெட்டி போட்டு இருப்பேன் நடந்தது பெரிய தப்பு என் பையன் மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டான் நீ என்னைக் கூட பொறந்த தங்கச்சியா பார்த்த உனக்கு அப்படி ஒரு துரோகத்தை நாங்கள் பண்ணி இருக்க கூடாது என்ன மன்னிச்சிடுங்க என்று அழுது கொண்டு கேட்கிறார். அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படுற ஆள் இல்ல கால் வயிறு குடித்தாலும் உழைச்சு சாப்பிடணும்னு நினைக்கிற ஆள் தான் என்று சொல்லுகிறார். அதை நீ சொல்லனுமா எனக்கு உன்ன பத்தி தெரியாதா என்று கேட்கிறார். இனியாவ பாப்பாவை ஏமாத்தணும்னு அவன் அப்படி பண்ணி இருக்க மாட்டான் உன் வயசு அப்படி அதுக்காக அவன் பண்ணது சரின்னு சொல்லல இதுக்கு மேல அவன் எந்த தப்பும் பண்ண மாட்டா எங்கள மன்னிச்சிடுங்க என்று மீண்டும் மன்னிப்பு கேட்டு அழ பாக்யா சமாதானம் செய்ய ஆகாஷ் சாரி ஆன்ட்டி நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணீங்க ஆனா நான் உங்களை ஏமாத்திட்டேன் சாரி ஆன்ட்டி என்று கேட்கிறார். இந்த தப்பெல்லாம் நானே சரி பண்ணிடுறேன் குடும்பத்தோட நான் எங்கேயாவது போயிடுறேன் இனிமே உங்க வீட்டுக்கு வரமாட்டேன் ஆகாஷ் இனிமே இனியா பாப்பா பக்கம் திரும்பி கூட பாக்க மாட்டான் நான் எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போகிறேன். என்ன இருந்தாலும் தகுதி இல்லாம பழகுனது இவனோட தப்பு தானே என்று சொல்ல அதற்கு பாக்யா அப்ப படிப்பெல்லாம் என்ன ஆகும் என்று சொல்ல எதுவும் வேணாம் படிப்பை மூட்டை கட்டி வச்சிட்டு எங்கேயாவது வேலைக்கு போகட்டும் இந்த ஊர்ல மட்டும் வேணாம் உங்க முகத்துல மட்டும் நான் முழிக்க மாட்டோம் என்று சொல்லிவிடுகிறார்
செல்வி எனக்கு இருபது வருஷத்துக்கு மேல தெரியும் ஆகாஷ் என் மனச விட்டு அவகிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கேன் உங்க வீட்டு கதை எல்லாம் எனக்கு தெரியும் என் வீட்டு கதையெல்லாம் அவளுக்கு தெரியும். அஞ்சு நிமிஷம் கூட அவ ஓரமாக உட்கார்ந்து நான் பாக்கல, இவ்வளவு கஷ்டப்பட்டது இந்த மூணு பேருக்காக தான். உன் பேரை சொன்னாலே அவளுக்கு அவ்வளவு சந்தோசம். நீயும் இனியாவும் தொடர்ந்து பழகுறது உங்களுக்கும் நல்லது இல்ல ரெண்டு குடும்பத்துக்கு நல்லது இல்லை நிறைய பிரச்சனை வரும் அதை சமாளிக்கிறதுக்கு நேரமே போயிடும்.
நீயும் இனியாவும் பார்த்துக்க வேணாம் பேசிக்க வேணாம் உன்னோட நினைப்பு ஃபுல்லா கலெக்டர் ஆகிறதுல தான் இருக்கணும். அதுக்கப்புறம் உனக்கும் இனியாக்கும் என்ன நல்லதோ அதை நானே செய்வேன் என்று சொல்லுகிறார். படிப்ப தவிர இப்ப எதுவுமே வேணாம்னு எனக்கு சத்தியம் பண்ணி சொல்லி இருக்கா, இப்ப நீயும் எனக்கு அதை பண்ணனும். நான் படிப்ப கலெக்டர் ஆகுவேன்னு சத்தியம் பண்ணு என்று சொல்லுகிறார். இந்த சத்தியம் பண்றது கஷ்டம்தான் ஆனால் நான் தகுதியும் பணத்தையோ எண்ணி நான் சொல்லல, உங்க எதிர்காலத்தை நினைச்சு தான் சொல்றேன் என்று சொல்லி முடிப்பதற்குள் சத்தியமா இனிமேல் இனியா கிட்ட பழக மாட்டேன் என்று சொல்லுகிறார்.
பிறகு பாக்யா ஆகாஷிடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு ஆகாஷ் பதில் என்ன? செல்வி என்ன சொல்லுகிறார்? கோபி செழியன் இடம் என்ன பேசுகிறார்? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
