சிம்பொனி இசை என்றால் என்ன?: இளையராஜா விளக்கம்
சிம்பொனி பற்றி இளையராஜா தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்..
லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரமும் சிம்பொனி அமைத்துள்ளதாக சில நாட்களுக்கு முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா தெரிவித்திருந்தார். அதில்,
‘லிடியன் என்னுடைய சிஷ்யன். அவர் சிம்பொனி அமைத்துள்ளதாக என்னிடம் கொண்டு வந்து போட்டுக் காட்டினார். கொஞ்ச நேரம் கேட்ட நான் அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, இது சிம்பொனி இல்லை, சினிமாவின் பின்னணி இசைபோல உள்ளது. சிம்பொனி என்றால் என்னவென முதலில் தெரிந்துகொண்டு, அதன் பின்னர் சிம்பொனி உருவாக்கு’ எனக் கூறினேன். அவரை நான் வழிப்படுத்தி உள்ளேன் என பதில் அளித்திருந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பலரும் இளையராஜாவை விமர்சித்தார்கள். இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் இன்னும் அதிகமாகிக் கொண்டே உள்ளது
இத்தகு சூழலில், இளையராஜா அவரது இசைக் கச்சேரி ஒன்றில் சிம்பொனி என்றால் என்ன? என்பது குறித்து விளக்கமாக கூறியுள்ளார். அதாவது, இது தொடர்பாக முதலில் நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த இசைஞானி இளையராஜா, ‘இப்போது நான்கு கவிஞர்கள் நான்கு விதமான கவிதைகளை ஒரே நேரத்தில் கூறினால் அதனைக் கேட்க முடியுமா? ஆனால், சிம்பொனி என்பது அப்படி இல்லை எனக் கூறிவிட்டு, மேடையில் இருக்கும் இசைக் கலைஞர்களை வாசிக்கச் சொல்கிறார்.
பின்னர், மற்றொரு குழு இசைக் கலைஞர்களை வேறொரு மெட்டில் வாசிக்கச் சொல்கிறார். பின்னர் இரு குழுவினரையும் ஒரு சேர வாசிக்கச் சொல்கிறார். அதனைக் கவிதை எனவும் கூறுகிறார். இதுதான் சிம்பொனி.
எல்லா கவிதைகளும் ஒரே நேரத்தில் படிக்கப்படுகிறது. இதுதான் சிம்பொனி என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார். இது குறித்த நிகழ்வு தற்போது இணையத்தில் இசை ஆர்வலர்களால் வைரலாகி வருகிறது.