சூர்யாவுக்கு வந்த சந்தேகம், அருணாச்சலம் சொன்ன உண்மை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா சுந்தரவல்லி வெறுப்பேற்ற கூடிய சீக்கிரம் இந்த வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் அது பையனா இருந்தா சூர்யாவை விட அதிகமா ஏறும் பொண்ணா இருந்தா இந்த வீட்டோட உண்மையான மகாராணியா இருக்கும் அந்த குழந்தையை நீங்க எல்லாரும் கொஞ்சம் தான் போறீங்க, எப்படி இருக்கும் உண்மையான மகாராணியா இருக்கும் என்று சுந்தரவல்லி பக்கத்தில் அழுத்தமாக சொல்லிவிட்டு சென்றுவிட உச்சகட்ட கோபம் அடைந்த சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் இது மாதிரி ஒன்னு நடந்துருச்சுன்னா அப்புறமா எந்த எல்லைக்கும் போவேன் என கோபமாக பேசிவிட்டு ரூமுக்குள் சென்று வருகிறார். உடனே மாதவியும் அசோகனும் ரூமுக்குச் சென்று இது மாதிரி நடக்க விடமாட்டோம் நீங்க பயப்படாதீங்கம்மா என்று சொல்ல எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்று சொல்லுகிறார்.அவர் இந்த வீட்டுக்கு வந்த முதல்ல இருந்து அவளை துரத்தி அனுப்பி இருந்தால் இவ்வளவு தூரம் வந்து நடந்திருக்குமா அவ தோட்டக்காரின்னு நினைச்சேன் ஆனா அவளுக்கு இந்த வீட்டில யார்கிட்ட பேசினா இந்த வீட்டில் தங்க முடியும்னு எல்லாம் தெரிஞ்சிருக்கு என்று சொல்லுகிறார்.
உடனே மாதவி நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க அம்மா சூர்யா சொன்ன இந்த விஷயம் நடக்காம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொல்லுகிறார். அது மட்டும் இல்லடி சூர்யாவும் ஓவரா பேசுறான் அதிகமா நக்கல் பண்றான் ரூம்ல போய் என்ன ஏத்தி விடுறானே தெரியல என்று சொல்ல எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்லிவிட்டு மாதவி சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் உன்கிட்ட நிறைய விஷயம் பேசணுமா என்று சொல்லுகிறார்.
கேளுங்க அண்ணே என்று சொல்ல எங்கம்மா போன அண்ணனுக்கு எதுவும் அச்சு முறுக்கு அதிரசம் வாங்கிட்டு வரல என்று கேட்க அதெல்லாம் அங்கு கிடைக்கலைன்னா என்று சொல்கிறார் நான் சும்மா சொன்னேன் என்று சொல்லிவிட்டு அந்த இடமெல்லாம் எப்படி இருந்தது என்று கேட்கிறார். அதற்கு நந்தினி சூப்பரா இருந்தது அங்கு ஒரு நீச்சல் குளம் இருந்தது அதில் தண்ணீர் ப்ளூ கலர் இருந்தது என்று சொல்ல உனக்கு தான் நீச்சல் தெரியுமே குதிச்சு என்ஜாய் பண்றது என்று கேட்க எங்கனா அதுக்கு எல்லாம் டைம் இல்லை என்று சொல்லுகிறார். போறதே சந்தோஷமா இருக்க தான் அங்கேயும் போய் டைம் இல்லன்னு சொன்னா எப்படிமா என்று கேட்க சின்னையாவாவது குளிச்சாரா என்று கேட்க அவர் எங்க குளிச்சாரு ஃபுல்லா குடிச்சிக்கிட்டே தான் இருந்தாரு என்று சொல்லுகிறார் உடனே கல்யாணம் எங்க சின்னையா எங்க போனாலும் இதை மட்டும் கரெக்டா பண்ணிடுவாரு என்று சொல்லுகிறார்.
என்ன கடத்திட்டு போனது கூட தெரியாம வீட்டுக்கு வர்ற வரைக்கும் ஃபுல் போதையில் இருந்தாரு என்று சொல்ல என்னம்மா சொல்ற என்று கேட்கிறார் உடனே நந்தினி அங்கு நடந்த விஷயங்களை சொல்ல உனக்கு எங்க போனாலும் பிரச்சனை தானா வருது என்று சொல்லுகிறார் நல்ல வேலை அர்ச்சனா அம்மா காப்பாற்றினார்கள் என்று சொல்ல ரேணுகா அவங்களால நான் உங்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கு என்று சொல்லுகிறார். அவங்க எப்படி அங்கு வந்தாங்க என்று கேட்க அவங்களுக்கு தெரிஞ்ச ரெசார்ட்னு சொன்னாங்க என்று சொல்லுகிறார் நீ போற இடத்துக்கெல்லாம் வராங்க எனக்கு என்னமோ சரின்னு படல என்று சொல்ல, நீங்க வேறன்ன அவங்க வந்ததுனால தான் என்ன காப்பாற்றினார்கள் என்று சொல்ல, அப்ப இவ்வளவு நடந்தும் சின்னவரு போதையில் தான் இருந்தாரா என்று சொல்ல அவருக்கு நான் இங்கே வந்து தான் எல்லாமே சொன்னேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
சூர்யாவின் பிளட் ரிப்போர்ட்டை செக் பண்ண டாக்டர் அருணாச்சலத்திற்கு போன் போடுகிறார் அவரிடம் அருணாச்சலம் சூர்யாவுக்கு நாட்டு மருந்து கொடுத்ததினால் தான் இப்படி ஆச்சா என்று கேட்க அதற்கு சுத்தமா வாய்ப்பிள்ள சூர்யாவோட பிளட்ல நாட்டுமருந்து இல்ல என்று சொல்லுகிறார் ஆனால் சூர்யா நாட்டு மருந்து குடிச்சானே என்று சொல்ல நீங்க தான் சொல்றீங்க ஆனா அவரோட பிளட்ல எதுவும் கலக்கல ஆனா அதுக்கு பதிலா வேற ஒரு மருந்து கலந்திருக்கு என்று சொல்ல அருணாச்சலம் அதிர்ச்சி அடைகிறார். வேற என்ன மருந்து என்று கேட்க இது ஒரு அலோபதி மருந்து இந்த மருந்த அளவுக்கு அதிகமா சாப்பிட்டா உயிர் போற நிலைமை வரும் இது யாரோ சூர்யாவுக்கு அதிகமா கலந்து கொடுத்து இருக்காங்க அதனால தான் அவருக்கு அவ்வளவு சீரியஸா ஆயிருச்சு அதுவும் இல்லாம டாக்டரோட சீட்டு இல்லாம இந்த மருந்த வாங்க முடியாது என்று சொல்ல அருணாச்சலம் என்ன டாக்டர் சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொல்லுகிறார். உங்களுக்கு சந்தேகமா இருந்தா வேற ஏதாவது ஒரு டாக்டர் கிட்ட கேட்டுக்கோங்க என்று சொல்ல அப்படி எல்லாம் இல்லை டாக்டர் என்று யாரோ கலந்து கொடுத்து இருக்காங்க யாரு என்னன்னு பாருங்க என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார்.
மறுபக்கம் நந்தினி வேப்ப எண்ணெய் வாங்கிக் கொண்டு வர அதனை ஊற்றி வைக்க கிச்சனில் பாட்டில் எடுக்க அது அர்ச்சனா சூர்யாவின் கலந்து கொடுத்த ரேணுகாவிடம் கொடுத்த மருந்து பாட்டில் எடுத்து பார்க்க நந்தினி இது யார் இங்க வச்சாங்க இது என்ன மறந்தது என்று கேட்டுக் கொண்டிருக்க ரேணுகா கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அதில் இருமல் மருந்து என்று சொல்ல இருமல் மருந்து உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார் அதற்கு என் வீட்டுக்காரர் கூட இந்த மாதிரி தான் வாங்கி குடிப்பாரு என்று சொல்ல அதற்கு நந்தினி சரி யாருது என்று நான் போய் கேட்டு கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ல அது ரொம்ப நாளா இங்கதான் இருக்கு என்று சொல்ல, அதை சிங்கிள் ஊற்றிவிட்டு கழுவி அதில் வேப்ப எண்ணையை நந்தினி ஊற்றி வைக்கிறார்.
மறுபக்கம் மாதவி ரூமில் சூர்யா அவ்வளவு தூரம் அழுத்தமா சொல்றானா அந்த ரெசார்ட்ல எதுவும் நடக்காம இருந்திருக்குமா என்று கேட்க நீ அத நந்தினி கிட்டயே கேட்கலாமே என்று அசோகன் சொல்லுகிறார்.அவ என்ன சொல்லுவா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலன்னு சொல்லுவா என்று சொல்ல இதுல நந்தினி மட்டும் இருப்பானு நினைக்கிறேன் உன் தம்பி எதுவும் பண்ணிருக்க மாட்டானா என்று சொல்ல அவன் இந்த வீட்டில செடி கொடி பாத்திரம் மாதிரி நந்தினியும் ஒரு ஆள் அவ்வளவுதான் இவதான் எல்லாம் பண்ணி இருப்பா என்று சொல்லுகிறார்.இதற்கு ஏதாவது ஒரு முடிவெடுக்கணும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
சூர்யா நந்தினியிடம் அங்கு நடந்ததெல்லாம் விடு ஆனால் அந்த ரெசார்ட், வசதி, அங்கு இருந்த அட்மாஸ்பியர் எல்லாம் எப்படி இருந்தது எனக்கு ஓகேவா என்று கேட்க நந்தினி ஓகே தான் சார் என்று சொல்கிறார். என்ன ஆர்வமே இல்லாம சொல்ற உனக்கு பிடிக்கலையா என்று கேட்கிறார்.புடிக்காம இல்ல எனக்கு புரியல என்று சொல்லுகிறார் புரியலையா என்று சூர்யா கேட்க எதுக்கு அவ்வளவு காசு கொடுத்து அங்க தூங்கி எழுந்து வரவா என்று கேட்கிறார். அது மட்டுமில்லாமல் எல்லாமே விலை அதிகம்.
இவ்வளவு காசு வாங்குறாங்க சாப்பாடு நம்மலே போட்டுக்கணுமா அதுவும் உக்கார கூட முடியாமல் நின்னுட்டு சாப்பிடனுமா என்று சொல்ல அதற்கு சூர்யா அதுக்கு பஃபே சிஸ்டம் பேரு நந்தினி என்று சொல்லுகிறார். மரியாதையா உட்கார வைத்து சாப்பாடு போடுவது எப்படி இருக்கு அதை விட்டுட்டு நீங்களா போய் சாப்டுங்கனு சொன்னா மரியாதையா இருக்கா என்று கேட்கிறார். பப்பேவும் இருக்கு ஆனா நம்ம ஆர்டர் பண்ணி தான சாப்பிட்டோம் என்று சொல்ல அங்க கவனிச்சது தான் சொல்றேன் என்று சொல்லுகிறார் அது மட்டும் இல்லாம அங்க பாதி பேர் ஸ்பூன்ல சாப்பிடுறாங்க அது கூட எனக்கு புரியுது ஆனா குச்சி குச்சியா ஒரு ஸ்பூன் வெச்சிருந்தாங்க அதுல எப்படி சார் எனக்கு புரியவே இல்ல. கை நிறைய அள்ளி சாப்பிட்டா தான வயிறு நிறையும். இதுல எல்லாருக்கும் யூனிஃபார்ம் வேற அது மட்டும் இல்லாம கதவை திறந்து விடுவதற்கும் சாப்பிட்டு போனதுக்கு அப்புறம் கதவை மூடவும் ஒரு ஆளு ஏன் நம்மளுக்கு கை இல்லையா நம்மளை தனத்துக்கு மாட்டோமா அவருக்கு சம்பளம் வேற அதுவும் இல்லாம ஒரு உக்காரத்துக்கு ஒரு நாற்காலி கூட இல்லை. அதுக்கப்புறம் என சூர்யா கேட்டுக்கொண்டே இருக்க ரூமுக்குள்ள வந்தா எல்லா அளவு எடுத்து செஞ்சு வெச்ச மாதிரி இருக்கு உட்கார கூட கூச்சமா இருக்கு படுக்க கஷ்டமா இருக்கு என்று சொல்ல அதற்கு சூர்யா இந்த ரெசார்ட் மட்டும் இல்லை எந்த ரெசார்ட்லயும் இப்படித்தான் இருக்கும் அதுக்கு தானே இவ்வளவு காசு கொடுக்கிறோம் என்று சொல்ல, அதற்கு நந்தினி அதுதான் சார் எனக்கும் புரியல நீங்கதான் இவ்வளவு காசு கொடுத்து லூசு மாதிரி போய் இருக்கீங்கன்னு பார்த்தா என்று ஆரம்பித்து அமைதியாக, சூர்யா என்ன மாதிரியே நிறைய லூசுங்க வராங்களா என்று கேட்க மன்னிச்சிடுங்க சார் ஏதோ பேச்சுவார்த்தையில் சொல்லிட்டேன்னு சொல்லுகிறார். அங்க வரவங்க எல்லாரும் வசதியா இருக்கிறவங்க தான் அதனால அவங்களுக்கு அதெல்லாம் தெரியாது என்று சொன்னார் இவ்வளவு காசு செலவு பண்ணி இருந்தா எப்படி நிம்மதியா இருக்க முடியும் நிம்மதியே போதும் இந்த ஊர்காரவங்களை புரிஞ்சுக்க முடியல என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் குடும்பத்தினர் அனைவரிடமும் சூர்யா உடம்பு சரியில்லாமல் போனதுக்கும் நந்தினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லுகிறார். நீங்க பேசுறத பாத்தா நான் எதுவும் தப்பு பண்ணிட்ட மாதிரி உள்ளுக்குள்ள தோணுதுமா என்று மாதவியிடம் நந்தினி சொல்ல, நீ பண்றது எல்லாமே தப்புதான் என மாதவி நினைக்கிறார்.
சூர்யா நந்தினி இடம் ஒரு பக்கம் உன்ன கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க இன்னொரு பக்கம் என்ன கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க இதெல்லாம் யார் பண்ணி இருப்பாங்க என்று கேட்கிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
