பிஏவுடன் சேர்ந்து நாடகமாடும் சிட்டி, வருத்தப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
பிஏவுடன் சேர்ந்து சிட்டி ரோகினியை ஏமாற்றியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து, மீனா, சீதா என அனைவரும் போலீசிடம் கெஞ்சு சந்திராவை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த ஒரு நாள் தான் டைம் அதுக்குள்ளார அந்த பையன கூட்டிட்டு வந்து விடுங்க என்று சொல்லிவிடுகிறார். பிறகு சிட்டியை சந்திக்க வந்த ரோகினி எதுக்குன்னு கூப்பிட்ட என்று சொல்லுகிறார் உடனே பிஏ இருந்து ரூமுக்கு அழைத்துச் சென்ற சிட்டி பி ஏ படுத்த படுக்கையாக இருப்பதை பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைகிறார் என்னாச்சு என்று கேட்க லேசா தான் அடிச்சேன் ஆனா நெஞ்ச புடிச்சுகிட்டு விழுந்துட்டா இன்னும் ஒரு வாரம் எப்படி வெச்சிருந்தா செத்து போயிடுவான் சொல்லிட்டாங்க இவனுக்கு ட்ரீட்மென்ட் பாக்கணும் என்று சொல்லுகிறார்.
இது மட்டும் இல்லாம இவன் வீட்ல வைஃப் கம்ப்ளைன்ட் பண்ணி தேடுனாங்கன்னா என்னோட ஆளுங்க தான் போய் தூக்கிட்டு வந்தாங்க நான்தான் மாட்டுவேன் போலீஸ் கேஸ் பிரச்சனை வந்தா கண்டிப்பா உன் பெயர் சொல்லிடுவா ரோகிணி என்று சொல்லுகிறார். உடனே டென்ஷன் ஆன ரோகினி, நான் உன்னை இப்படி அடிக்க சொன்னேன் என்று சொல்ல, அதுக்கு தான் பிரச்சனையில் இருந்து எப்படி வெளிய வருதுன்னு சொன்னதா உன்ன கூப்பிட்டேன் என்று சொல்கிறார். பிறகு ரோகிணி இடம் எங்கெல்லாம் வச்சு பார்த்தா மாட்டிக்குவோம் அதனால கேரளாவில் வைத்து தான் பார்க்கணும் இல்ல நான் இனிமே செத்துப் போய்விடுவான் என்று சொல்லி ரோகினி இடம் 2 லட்சம் பணத்தை கேட்கிறார்.
என்னால இவ்ளோ பணம் எப்படி கொடுக்க முடியும் என்று சொல்ல இவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா உனக்கு இருக்கிற பிரச்சினையில் இதுதான் பெரிய பிரச்சினையா இருக்கும் என்று சொன்னவுடன் சரி நான் ரெடி பண்ண பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் உடனே ரூமுக்குள் வந்த சிட்டி ஆக்சிஜன் மாஸ்க்கை எடுக்க இருவரும் சிரிக்கின்ற. அப்போது தான் தெரிய வருகிறது பிஏவுடன் சேர்ந்து சிட்டி நாடகமாடியுள்ளார். உடனே பிஏ நான் தான் சொல்லல அவ எவ்வளவு காசு வேணா தருவா என்று சொல்லிவிட்டு இவகிட்ட இருந்து நான் இன்னும் காசு நிறைய வாங்க போறேன் என்று சிட்டி ப்ளான் போடுகிறார்.
மறுபக்கம் மீனாவும்,முத்துவும் வக்கீலை பார்க்க வருகின்றனர். நடந்த விஷயங்கள் வக்கீலிடம் சொல்ல விற்பவருக்கு இருக்கிற ஒரே நல்ல விஷயம் அந்தப் பையனை இன்னும் அரெஸ்ட் பண்ணல அது மட்டும் தான் என்று சொல்லுகிறார். இன்னும் ஈசியா ஒரு வழி இருக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தவங்க வாபஸ் வாங்கிட்டா எந்த பிரச்சனையும் இல்ல ஈஸியா பேச முடிச்சிடலாம் என்று சொல்ல அதுதான் எங்களுக்கு வாங்குவாங்கன்னு தெரியல என்றும் முத்து சொல்ல முயற்சி பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க என்று சொல்லுகிறார். எனது முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்து அத்தை எப்படி வாங்குவாங்க என்று சொல்ல அப்பா மனசு வச்சா முடியும் ஆனா அப்பா பேசி பார்ப்போம் என்று இருவரும் பேச அண்ணாமலை மறுக்கிறார். உடனே மனோஜ் வந்து அதெல்லாம் நீங்க எதுவும் பேசாதீங்க பாய் என்று சொன்னவுடன் முத்து கோபப்பட்டு சட்டையை பிடித்து உனக்கு தான் தப்பே செய்யாது உங்களுக்கு ஜெயிலுக்கு அனுப்பனும்னா ரொம்ப பிடிக்குமே என்று சொல்லி கோபப்பட்டு அமைதியாகிறார். உடனே நீ எல்லாம் பேசவே கூடாது போ என்று சொல்ல மனோஜ் சென்று விடுகிறார். அண்ணாமலை இடம் பேசிய முத்து தப்பே செய்யாமல் ஜெயிலுக்கு போதெல்லாம் இவ்வளவு பெரிய வலின்னு எனக்கு தெரியும். அந்தப் பையன் இத்தனை வருஷமா படிச்ச படிப்பு வீணா போய்டும்பா அவன் குடும்பத்தை காப்பாத்தணும் என்று எல்லாம் பேசுகிறார்.
அண்ணாமலை எடுக்க போகும் முடிவு என்ன? விஜயா என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.