எழிலால் உடைந்து போன பாக்யா, பிறகு நடந்த உணர்ச்சிப்பூர்வமான செயல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
எழிலால் பாக்யா மனமுடைந்து அழுதுள்ளார்.
தமிழ் சின்னத்திரை ரயில்வே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஃபங்ஷனில் கலந்து கொள்ள வேகமாக வர எழில் அவரை தடுத்து நிறுத்துகிறார். இந்தப் படம் நல்லா நடக்கணும்னா நீ வரக்கூடாது மா என்று சொல்ல பாக்யா அதிர்ச்சியாகி நிற்கிறார். நான் எதுக்கு வரக்கூடாது என்று சொல்லி எழில் என்று சொல்ல, காரணம் எல்லாம் என்கிட்ட கேட்காதம்மா ஆனா இப்போ இந்த படத்துக்கு நீ வந்தா நான் பெரிய டைரக்டர் ஆகணுன்ற கனவு ஒடஞ்சு போயிடும் என்று சொல்ல பாக்யா கண்கலங்கி அழுகிறார். நீ எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணு எனக்காக பிரே பண்ணிக்கோ இந்த படம் நல்லா வரணும்னு வேண்டிக்கோ இப்போ என்று சொல்ல சரியில்லைன்னா போயிடறேன் நீ அழாதே என்று பாக்யா உடைந்து போகிறார்.
உடனே அமிர்தா வெளியே ஓடிவந்து அம்மா அம்மா என்று கூப்பிட எழில் அவர் கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறார். அம்மா வரமாட்டாக போகட்டும் விடு என்று சொல்ல அவர் எதுவும் புரியாமல் இருக்கிறார். பிறகு எழிலை உள்ள கூப்பிடுவதாக வந்து ஒருவர் கூப்பிட்டு செல்ல பூஜைக்கு லேட் ஆகுது பூஜை ஆரம்பிச்சிடலாம் என்று சொன்னவுடன் எல்லாரும் வந்துட்டாங்களா என்ற புரொடியூசர் கேட்கிறார். எல்லாரும் வந்துட்டாங்க என்று சொல்ல குடும்பத்தினர் இன்னும் அம்மா வரலையே என்று கேட்க அம்மா வரமாட்டார்கள் என்று சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர் கோபி சந்தோஷப்படுகிறார். இனியா மற்றும் செழியன் பாக்யாவிற்கு ஃபோன் போட அவர் எடுக்கவில்லை. பிறகு பூஜையை தொடங்க பாக்யா கண்ணீருடன் மெதுவாக வெளியேறுகிறார்.
ப்ரொடியூசர் இப்போ படத்தோட டைட்டில் அனௌன்ஸ் பண்ண போறோம் என்று சொல்லி எழிலிடம் மைக்கை கொடுக்கிறார். அவரும் என் மனசுக்கு நெருக்கமான ஒரு பேர தான் இந்த படத்துக்கு வச்சிருக்கேன் என்று சொல்லி ஸ்கிரீனை ஓப்பன் செய்ய பாக்கியலட்சுமி என்று இருப்பதை பார்த்து கோபிய அதிர்ச்சி அடைகிறார் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இந்தப் படத்தோட பேரு பாக்கியலட்சுமி என்று சொன்னவுடன் பாக்யா கண்கலங்கி நிற்கிறார்.
பிறகு அங்கிருந்து பாக்யா கிளம்ப நினைக்க எழில் பேச தொடங்கியவுடன் பேசுவதை கேட்டு அங்கேயே நிற்கிறார். நான் இந்த நிலைமைக்கு வர ஒரே ஒரு காரணம் எங்க அம்மா மட்டும்தான் என்னால முடியாதுன்னு நான் நெனச்சபெல்லாம் முடியும் கணவ நோக்கி நீ ஓடுன்னு சொன்னது எங்க அம்மா தான் என்னோட இன்ஸ்பிரேஷன் எங்க அம்மா தான் என்று பேச கோபி ஒரு பக்கம் டென்ஷனாக பாக்யா ஆயிட்ட எல்லாம் கேட்டுக்கொண்டு நிற்கிறார்.
என்ன நடக்கப் போகிறது? பாக்யா என்ன செய்யப் போகிறார்? என்பதை எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.