சுந்தரவல்லியை அசிங்கப்படுத்திய மினிஸ்டர் குடும்பம், சூர்யா கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்புராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி நான் சமைச்சு தரேன் என்று கிச்சனுக்கு செல்கிறார். என்ன கிச்சன்ல ஒண்ணுமே இல்லை என்று எல்லாத்தையும் திறந்து பார்த்து கிச்சனையே ஒரு வழி ஆக்கி வைத்திருக்கா என்று சொல்லி வெங்காய தக்காளி எடுக்கிறார் அருணாச்சலம் இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல ஆன்லைன்ல கூட ஆர்டர் பண்ணிக்கலாம் என்று சொல்ல கொஞ்ச நேரம் வாய மூடுங்க நானே சமைச்சுக்குவேன் என்று சொல்லுகிறார். பிறகு வெங்காயம் தக்காளி எதுவுமே கட் பண்ணாமல் மொளகாவை அள்ளிப்போட்டு உப்பு என இருக்கிறதோ எல்லாத்தையும் அள்ளிப்போட்டு மிக்ஸியில் அரைக்கிறார்.
சுரேகா அம்மா என்ன சமைக்கிறாங்க என்று கேட்க அம்மா கிச்சனுக்கு போய் 10, 15 வருஷம் இருக்கும் இன்னைக்கு அவங்க செய்யறது தான் சாப்பாடு என்று சொல்லி சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா உருண்டை குழம்பு, பிரண்டை துவையல் இன்னும் வை என்று ரசிச்சு சாப்பிடுகிறார். சட்னி அரைத்து முடித்த பிறகு சுந்தரவல்லி தோசையை ஊத்துகிறார். அசோகன் என்ன பாத்தா பாவமா இல்லையா சூர்யா என்று கேட்க, பாவம்,ரொம்ப பாவமா இருக்கு அதுவும் இந்த பருப்பு பாயாசம் இருக்கு வேற லெவல் என்று பெருமையாக பேசுகிறார் உடனே அருணாச்சலத்திடம் நீங்க அம்மாவுக்கு தெரியாம ஒரு கல்ப் அடிச்சுடுங்க என்று சூர்யா சொல்ல அவரும் அப்படியே குடித்து விடுகிறார்.
நந்தினி நான் மேல போற சார் என்று சொல்ல அதெல்லாம் இரு சமையல் எடுத்துக் கொண்டு வருவாங்க பாத்துட்டு போ என்று சொல்ல, சுந்தரவல்லி காரச் சட்னியும் தோசையும் ரெடி என சொல்லி அனைவருக்கும் பரிமாற சொல்லுகிறார். கேரட் தோசை, ரவா தோசை, ஊத்தாப்பம் , வெங்காய தோசை, பொடி தோசை,என எல்லா தோசையும் பார்த்து இருக்கேன் இது என்ன கருப்பு தோசை என்று யோசித்துக்கொண்டே அனைவருக்கும் பரிமாறுகிறார் கல்யாணம். அருணாச்சலம் என்ன இது தோசை இப்படி இருக்கு என்று கேட்க தோசை தான் கொஞ்சம் முறுகலா பண்ணிட்டேன் சட்னியோட சேர்த்து சாப்பிடுங்க எல்லாரும் என்று சொல்லுகிறார். அனைவரும் தோசையை எடுத்து வாயில் வைக்க யாராலும் சாப்பிட முடியவில்லை. உடனே சூர்யா உன் குத்தமா என் குத்தமா என்று பாட்டு பாடி சிரிக்கிறார். உடனே சுந்தரவல்லி மாதவி தோச நல்லா இருக்கா என்று கேட்க அழுது கொண்டே என்னை விட்ருங்கமா என்று சொல்லுகிறார்.
சுரேகாவும் நாங்கல்லாம் பாவம் உங்க சமையல் ஆர்வம் எல்லாம் புரியுது ஆனா எங்க உயிரோட விளையாடாதீங்கம்மா என்று சொல்லுகிறார். உடனே சூர்யா என் பொண்டாட்டி என் தங்கம் செஞ்ச சாப்பாட்டுக்கு நான் பைவ் ஸ்டார் குடுப்பேன் நீங்க அந்த சாப்பாடுக்கு எவ்வளவு ஸ்டார் கொடுப்பீங்க என்று சொல்ல அசோகன் ஒன்று என கை காட்ட சுந்தரவல்லி கோபமாக எழுந்து சென்று விடுகிறார். அவளை சமைக்க கூடாதுன்னு சொன்னா அவர் இன்னும் ஜாலியா தான் இருப்பா, அதுக்காக அவ சமைக்கிறதை நான் சாப்பிட சொல்றியா என்று கேட்க, நம்மளுக்கு நம்மளோட காரியம் இல்லாம முக்கியம் அதெல்லாம் இங்க இருந்து துரத்தி விடணும் அதுக்காக நீங்க இதெல்லாம் டென்ஷனாக்கிட்டு இருந்தா என்ன பண்றது. அதுக்கு நான் என்ன பண்ணட்டும் இப்போ இந்த சுந்தரவல்லி கேட்க எல்லா வேலையும் அவளே செய்யட்டும் விடுங்க நம்ம கொடுக்கிற டார்ச்சர் இல்ல அவளே போகணும் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி என்னமோ பண்ணி தொலை என்று சொல்ல மாதவியும் ஓகே என்று சொல்லி வருகிறார்.
கிச்சனில் கல்யாணத்துடன் நந்தினி நீங்க ஏன் அவர்கிட்ட உண்மைய சொன்னீங்க நீங்க சமைச்சதாகவே சொல்லி இருக்கலாம் இல்ல என்று சொல்ல எனக்கு சின்னையா ஏதாவது கேட்டாலே எனக்கு கை எல்லாம் உதறிடும் என்று சொல்ல புஷ்பா அக்கா நீங்களாவது சொல்லி இருக்கலாம் என்று சொல்ல,சொல்றத விட நம்ம செய்யறது பாத்தே கண்டுபிடிச்சிடுவாங்க என்று சொல்லுகிறார். மாதவி வெளிய வந்து உட்கார்ந்து நந்தினி கூப்பிடுகிறார். உடனே எப்பவுமே இந்த வீட்டுல நீயே சமைச்சுடு என்று சொல்ல நானா என்று கேட்கிறார். நான் சமைச்சா தான் அம்மா சாப்பிட மாட்டாங்களே என்று சொல்ல அம்மா கிட்ட பேசிட்ட நீயே சமைச்சிடு என்று சொல்ல நந்தினியும் சரி என சொல்லுகிறார். பிறகு சுரேகா சாப்பிடலாமாகா என்று கேட்க , தாராளமா சாப்பிடு என்று சொல்லி நந்தினியை மீதி இருக்கிறதையும் எடுத்துக் கொண்டு வர சொல்லுகின்றனர்.
பாருக்கு வந்த அர்ச்சனா சூர்யா குடித்து கொண்டிருப்பதை பார்த்து அவர் அருகில் உட்கார்ந்து சரக்கை ஊத்தி குடிக்கிறார். நான் யாருன்னு தெரியுதா என்று சூர்யாவிடம் கேட்கிறார். எனக்கு ஒரு டவுட் இருக்கு என்று சொல்லி சூர்யாவிற்கு ஃபோன் பண்ண உடனே அர்ச்சனா போன எடுத்து நெனச்சேன் நம்பர் கூட சேவ் பண்ணி இருக்க மாட்டேனு, பிறகு பாரில் முதல் நாள் சந்தித்த விஷயத்தையும் ,என்ன ஷர்ட் போட்டிருந்த,என்ன பர்ஃபியூம் போட்டிருந்த என்பதை குறித்து எல்லாம் பேசுகிறார் அர்ச்சனா. அன்னைக்கு நைட்டெல்லாம் உன்னுடைய பெர்ஃப்யூம் ஸ்மல் என்ன விட்டு போகல. அவ்வளவு ஆசையா உன் கூட வாழ போறேன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதை கற்பனை செய்து வைத்திருந்ததாக சூர்யாவிடம் சொல்லுகிறார். பிறகு நீ எனக்காக பொறந்தவன் நீ எனக்கு மட்டும்தான் வேறு ஒருத்தி பக்கத்துல நிக்கறது என்னால ஏத்துக்க முடியாது இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல நம்ம சேர்ந்து வாழலாம் அவளை துரத்தி விடு என்று சொல்ல, சூர்யா எதுவும் சொல்லாமல் கையை தட்டிவிட்டு சென்று விடுகிறார். இதனால் அர்ச்சனா இந்த திமிரு தாண்டா இதுக்காக தான் நீ எனக்கு வேணும்னு நினைக்கிறேன் என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் எனக்குன்னு வாங்குனது என் கைக்கு வந்து சேர்ந்திருச்சு என்று மோதிரத்தை சொல்லுகிறார் சூர்யா. பிறகு மினிஸ்டர் குடும்பம் மற்றும் சுந்தரவல்லி என ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ள அங்கே மினிஸ்டர் குடும்பம் சுந்தரவல்லி அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கிறது யார் தெரியுமா ஒரு வேலைக்காரியை என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார்.
அந்த இடத்திற்கு சூர்யா நந்தினி உடன் வந்து இறங்கி கூலிங் கிளாஸ் போட்டு விடுகிறார் இப்பதான் அழகா இருக்க என்று சொல்ல அனைவரும் கடுப்பாகின்றன. என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.