ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? நேரடியாக மோதும் வாய்ப்பு?
ரஜினி நடிக்கும் கூலி படமும், கமல் நடிக்கும் தக் லைஃப் படமும் ஒரே நாளில் ரிலீஸாகி மோதுகிறதா? என்ற விவரம் குறித்து பார்ப்போம்..
நாயகன் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு, கமல் மற்றும் மணிரத்னம் தக்லைப் என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கமலின் பிறந்தநாளை முன்னிட்டு, தக்லைப் படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியானது. கூடவே இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தக் லைப் திரைப்படம் அடுத்தாண்டு ஜூன் 5 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதே ஜூன் மாதம் ரஜினியின் கூலி திரைப்படமும் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகின்றன. லோகேஷின் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
கமலுக்கு ‘விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷ், ரஜினிக்கும் கூலி மூலம் மிகப்பெரிய ஹிட் தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையடுத்து, கூலி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தக்லைப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதே நாளில் ரஜினியின் கூலி படமும் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை கூலி, தக்லைப் திரைப்படத்துடன் வெளியானால், பல வருடங்களுக்கு பிறகு ரஜினி மற்றும் கமலின் படங்கள் நேரடியாக மோதும் வாய்ப்பு அமையும்.
கடைசியாக 2005 ஆம் ஆண்டு ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. அதைத்தொடர்ந்து, 19 வருடங்களுக்கு பிறகு ரஜினி-கமல் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் வாய்ப்பு அமைந்துள்ள நிகழ்வு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இரு ஜாம்பவான்களின் படங்களும் அசத்தட்டும்.!