சந்தோஷத்தில் முத்து, மீனா.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

முத்து மீனா சந்தோஷத்தில் இருக்க அண்ணாமலை வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 08-03-25
SiragadikkaAasai Serial Today Episode Update 08-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைத்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் நல்ல மனசு நல்ல எண்ணமாக இருந்தால் பெரிய லெவல்ல உயர்ந்து கொண்டே போகலாம் என்று சொல்ல விஜயா இப்பதான் ஆர்டர் வந்திருக்கு இன்னும் பண்ணி முடிக்கல அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.

உடனே ரோகினி ஸ்ருதியிடம் மீனா கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகிட்டே இருக்காங்க உங்கள விட அதிகமா சம்பாதிச்சுடுவாங்க போல என்று சொல்ல, சம்பாதிக்கட்டும் அதுவும் நல்லது தானே என்று ஸ்ருதி சொல்ல, கொளுத்தி போட்டது வீணா போயிடுச்சு என்று முத்து சொன்னவுடன் ரோகினி சென்று விடுகிறார். உடனே ரவி எதுவும் ஸ்வீட் இல்லையா என்று கேட்க நீங்க போயிட்டு வாங்க என சமைத்து வைக்கிறேன் என்று சொல்லுகிறார். பிறகு அனைவரும் கிளம்ப கிச்சனுக்கு வந்த மீனாவிடம் முத்து சந்தோஷமாக கட்டிபிடித்து பேசுகிறார் மீனா இந்த ஆர்டருக்கு நம்ம கையில ஒன்றரை லட்சம் தேவைப்படுது என்று சொல்ல என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு எப்படியாவது ரெடி பண்ணலாம் என்று முத்து சொல்லுகிறார். ஆனால் மீனா வேணாம் என்னால முடிஞ்ச அளவுக்கு நான் ரெடி பண்றேன் அப்புறம் முடியலன்னா உங்க கிட்ட கேட்கிறேன் என்று சொல்ல முத்துவும் சரி என சொல்லுகிறார்.

மறுபக்கம் விஜயா ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க சிந்தாமணி போன் போடுகிறார். எங்க இருக்கீங்க மாஸ்டர் என்று கேட்க வீட்ல தான் இருக்கேன் என்று சொல்லுகிறார் இந்த மீனாவுக்கு ஏதோ ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கா என்று சொல்ல செஞ்சிட்டு போகட்டும் விடுங்க என்று சொல்லுகிறார் நீங்களே இப்படி சொன்னா எப்படி உங்களோட தொழிலுக்கு தானே போட்டியா வர அவள் மேல வளர்ந்துகிட்டே வரா என்று சொல்ல, இந்த ஆர்டர் மீனாவுக்கு கிடைக்க காரணமே நான் தான் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல என்று சொல்ல, இதுதான் மீனாவுக்கு கிடைக்கிற கடைசி ஆர்டர் இது பண்ணிட்டு அவ தொழிலுக்கே வரமாட்டா ஃப்ளவர் என்ற பெயருக்கு இடம் இல்லை வீட்டில் உட்கார்ந்து காலிஃப்ளவர்னா செய்யலாம் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.கொஞ்ச நேரத்தில் விஜயா காலிஃப்ளவர் வாங்கிக் கொண்டு வந்து மீனாவிடம் சமைக்க சொல்லிவிட்டு மனதில் இந்த ஆர்டரோடு உனக்கு லாஸ்ட் இதுக்கு அப்புறம் நீ சிந்தாமணி சொன்ன மாதிரி காலிஃப்ளவர் தான் செய்யணும் என்று மனதில் நினைத்துக் கொள்கிறார்.

முத்துவும் அண்ணாமலையும் பேசிக்கொண்டிருக்க பரசு வருகிறார். கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று கேட்க அதெல்லாம் நல்லதாக போய்க்கிட்டு இருக்கு என்று சொல்லி கையில் கொண்டு வந்து பாத்திரத்தை மீனா விடம் கொடுக்கிறார் இதுல என்ன இருக்கு என்று கேட்க நான் தான் ஏற்கனவே மாப்பிள்ளையோட மாமா கறிக்கடை வச்சிருக்காருன்னு சொன்னேன்ல அவரு என்ன பாக்க வீட்டுக்கு வந்து இருந்தாரு அப்ப நாலு கிலோ கறி எடுத்துட்டு வந்தாரு அதனால உங்களுக்கு ரெண்டு கிலோ எடுத்துட்டு வந்தேன் என்று சொல்ல விஜயா கொஞ்சம் குழம்பு வச்சுட்டு கொஞ்சம் நீ வருத்துரு என்று மீனாவிடம் சொல்லுகிறார். கல்யாண விஷயம் தான் எப்படி போகுது காசு ரெடி பண்ணிட்டியா என்று சொல்ல எல்லாம் ஓகே தான் ஆனா ஒரு லட்சம் மட்டும் துண்டு விழுது கேட்டுக்கிட்டு இருக்கா ரெடி பண்ணிடுவேன் என்று சொல்லுகிறார்.உடனே அண்ணாமலை என்கிட்ட கேட்கணும்னு தோணலையா மனோஜ் காலேஜ் செலவுக்கு நான் உன்கிட்ட எத்தனை தடவை வாங்கி இருக்கேன் ஆனா என்கிட்ட ஒரு லட்சம் இல்ல அதோட கம்மியா தான் இருக்கு என்று சொல்ல உடனே முத்து நாங்க இருக்குறது கொஞ்சம் தரோம் என்று சொல்லி விட அண்ணாமலை பணத்தை பற்றி யோசிக்காம நீ போய் கல்யாணம் வேலையை பாரு என்று அனுப்பி வைக்கிறார்.விஜயா 2 kg கறியை கொடுத்துட்டு ஒரு லட்சம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு போறாரு என்னத்த சொல்றது என்று மனசுக்குள் நினைக்கிறார்..

மறுபக்கம் கார் நிறுத்துமிடத்திற்கு வந்த முத்து அங்கு செல்வம் மற்றும் மற்ற நண்பர்கள் இருக்க என்ன விஷயம் எதுக்குடா அவர் சொன்ன என்று கேட்கிறார் ஒரு லண்டன் சவாரி வந்திருக்கு நீ போறியா என்று கேட்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற கோவிலை சுத்தி காட்டணும்னு சொல்றாங்க என்று சொல்ல அப்பனா பெரிய ஆடர் தானே நீயே போக வேண்டியது தானே என்று முத்து சொல்கிறார் எனக்கு இங்கிலீஷ் எல்லாம் பேச தெரியாது நீனா எப்படியாவது சமாளிச்சுட்டு வா என்று சொல்லி அவர் கஷ்டமா இருக்கு போன் போட முத்து தெரிந்த இங்கிலீஷில் அவர்களிடம் பேச மீனா இதை கவனித்துக் கொண்டிருக்கிறார். உடனே ஆர்டர் கன்ஃபார்ம் ஆக அனைவரும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்க மீனா இருப்பதை பார்த்து முத்து நடந்த விஷயங்களை சொல்ல பார்த்துக் கொண்டுதான் இருந்த ரொம்ப சந்தோஷம் என்று சொல்லுகிறார். நீங்க இன்னும் நல்லா படிச்சி இருக்கலாம் என்று சொல்ல படிச்சிருந்தா நீ கிடைச்சிருக்கு மாட்டியே என்று சொல்லி இருவரும் பேசிக் கொள்கின்றனர்.

மறுபக்கம் அண்ணாமலைக்கு விஜயா காபி போட்டு கொடுத்து விட்டேன் பரசுவிற்கு காசு கொடுக்கும் விஷயத்தைப் பற்றி கேட்கிறார். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லுகிறார்? விஜயா கேள்வி என்ன? முத்து மீனா என்ன சொல்லுகிறார். என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 08-03-25
SiragadikkaAasai Serial Today Episode Update 08-03-25