Web Ads

பாக்யா மீது பழி போட்ட ஈஸ்வரி, பாக்கியா வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய செல்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா மீது ஈஸ்வரி பழி போட வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளார் செல்வி.

baakiyalakshimi serial today episode update 08-03-25
baakiyalakshimi serial today episode update 08-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி இனியாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் சொல்ல ஈஸ்வரி இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே கோபி அதுவும் யாரை காதலிக்கிறார் தெரியுமா இந்த வீட்டை பெருக்கி தொடச்சி கூற்ற செல்வியோட பையனை என்று சொல்ல பாக்யா இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.குடும்பத்தினர் அனைவரும் இன்னும் பதற்றமாக ஈஸ்வரி போயும் போயும் ஊர் உலகத்துல எவனுமே இல்லாத மாதிரி அவன போய் லவ் பண்ணி வச்சிருக்க இந்த வீட்ல செல்வி வேல செய்யலைன்னா அவ சோத்துக்கு பிச்சை தான் எடுக்கணும் என்று சொல்லுகிறார்.

உடனே ஈஸ்வரி கோபப்பட்டு இனியாவை அடிக்க எழில் வந்து தடுத்து நிறுத்துகிறார். கோபி நம்ம ஸ்டேட்டஸ் என்ன அவங்களோட ஸ்டேட்டஸ் என்ன நம்ம இருக்கிறதை விட மேல தான் போக பாக்கணும் என்று சொல்லுகிறார். ஈஸ்வரி அவ நாலு வீட்டில் பத்து பாத்திரம் தேச்சா நீயும் கூட போவியா எந்த காரணத்துக்காக நீ இந்த முடிவு எடுத்திருக்க என்று சொல்லுகிறார். செழியன் காலேஜ்ல இந்த டைம்ல வர அபெக்ஷன் எல்லாருக்கும் இருக்கும் அது மாதிரியா என்று கேட்க எனக்கு அப்படியெல்லாம் இல்ல எனக்கு ஆகாஷ புடிச்சிருக்கு என்று சொல்ல மீண்டும் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். உடனே பாக்யா ஒரு பக்கம் அதிர்ச்சியாக நின்று கொண்டு இருப்பதை பார்த்த ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து இப்போ நீ எதுக்கு கல்லு மாதிரி நின்னுகிட்டு இருக்க உனக்கு பேச எதுவுமே இல்லையா என்று கேட்கிறார்.

எல்லாத்துக்கும் காரணம் நீதான் இந்த வீட்டு வேலைக்காரின்னா அவளை வேலைக்காரியா நடந்திருக்கணும் சோபால உட்கார வைக்கிறது என்ன டீ போடும்போது ஒன்னா கொடுக்கிறது என்ன பைக்ல கூட்டிட்டு போறது என்ன ரெஸ்டாரன்ட்ல உரிம கொடுக்கிறது என்னன்னு நீ தான் எல்லாத்தையும் கொடுத்த என்று சொல்லுகிறார். காலையில அவளுக்கு சாப்பாடு போட்டு டப்பால கொடுத்துட்டா அதோட அவன் என்ன பண்றா எது பண்றான்னு கவனிக்கறது இல்ல ஒரு பொம்பள புள்ளைய பெத்தா கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திதான் பாக்கணும் என்று பேசிக்கொண்டே போக உடனே எழில் அம்மாவுக்கு இந்த வீட்டை பார்க்கணும் அதுக்கு பணம் தேவைப்படுது அப்படின்னா வேலைக்கு போய் தான் ஆகணும் என்று சொல்ல கோபி நீங்க அப்படி பார்த்தா பாக்யாவை மட்டும் குறை சொல்ல முடியாதுமா என் மேலே தப்பு இருக்கு என்று சொல்லுகிறார்.

இவ்வளவு பேசியும் அமைதியா இருக்கணும் அப்ப உனக்கும் எல்லாமே தெரியுமா தெரிஞ்சுக்கிட்டே தான் அமைதியா இருக்கியா என்று கேட்க பாக்யா எதுவும் பேசாமல் இருக்கிறார். செழியன் லவ் பண்ணனும்னு முடிவு எடுத்த கொஞ்சம் வசதியா இருக்கிற குடும்பத்தில் ஏதாவது லவ் பண்ணி இருக்கலாமே என்று கேட்கிறார். அவன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இங்க வச்சுக்கலாம்னு நெனச்சியா நான் அவன மச்சானு கூப்பிடுவான நெனச்சியா என்று கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்க அமிர்தா மேலே போகிறார். உடனே ஈஸ்வரி இவ பசங்க லவ் பண்ணும் போதும் அவங்களுக்கு லவ் பண்ண பொண்ணு கல்யாணம் பண்ணி வச்சா அதனால் தான் இவ்வளவு என்னை யாரை லவ் பண்ணாலும் அம்மா கல்யாணம் பண்ணி வச்சுருவாங்கன்னு நினைச்சுட்டா.

செழியனும், ஜெனியும் லவ் பண்ணாங்க கல்யாணம் பண்ணி வச்சாங்க ஆனா வேற மதமா இருந்தாலும் அவங்க வசதியானவங்க என்று சொல்லுகிறார் ஆனால் இப்போ எழில் படம் பண்றான் டைரக்டர் ஆயிட்டான் அவனுக்கு இப்போ ஒரு நல்ல பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம் என்று சொல்ல அதற்கு எழில் அமிர்தா நல்ல பொண்ணு இல்லையா பாட்டி என்று கேட்க நல்ல பொண்ணு தான் ஆனா குழந்தையோடு தானே இந்த வீட்டுக்குள்ள வந்தா இப்ப வரைக்கும் அதுக்கு பதில் சொல்லிக்கிட்டே இருக்க என்று சொல்ல கோபி எந்த விஷயத்துக்கு எதுவோ பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். இவ அமிர்தாவையும் எழிலையும் சேர்த்து வச்சதனாலதான் இவ இந்த முடிவு எடுத்து இருக்கா இங்க நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் காரணம் இந்த பாக்யா தான் என்று சொல்லிவிட்டு எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனையை கொடுக்கிற கடவுளே என்று வேண்டிக் கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து செல்வி வருகிறார்.

செல்வி நடந்து விஷயம் எதுவும் தெரியாமல் கேஷுவல் ஆக நடந்து வர ஈஸ்வரி இப்ப எதுக்கு வந்த என்று கேட்கிறார்.ஏமா இப்படி கேக்குறீங்க என்று சொல்ல, எதுவுமே தெரியாத மாதிரி நடிக்காத என்று சொல்லுகிறார் எனக்கு எதுவும் புரியலமா என்று சொல்ல, உன் பையன் என் பேத்திய காதலிக்கிறானா காதல் என்று ஈஸ்வரி சொல்ல அதற்கு செல்வி என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி உன் பையன் அனுப்பிச்ச மெசேஜ் எல்லாத்தையும் என் பையன் பாத்துட்டான் என்று சொல்ல கோபி இன்னைக்கு காலையில உன் பையன் கூட இவ காபி ஷாப்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கான் அந்த காபி ஷாப் படி ஏற உன் பையனுக்கு தகுதி இருக்கா? அந்த காசு கூட என் பொண்ணு தான் கொடுத்திருப்பார் என்று சொல்லி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். உடனே ஈஸ்வரி வசதியான இடத்துல பொண்ண கட்டிட்டு அப்படியே செட்டில் ஆகலாம்னு நினைச்சியா என்று கேட்க இப்படி எல்லாம் பேசாதீங்க அம்மா இது அந்த கடவுளுக்கே பொறுக்காது என்று சொல்லுகிறார். செழியன் இனிமேல் உங்க பையன் உங்களுக்கு மெசேஜ் பண்ணா கைய வெட்டி போட்டுருவேன் என்று மிரட்டி விட்டு வீட்டிலிருந்து வெளியே போக சொல்லுகிறார் செல்வி அழுது கொண்டே பாக்யக்கா எனக்கு கூப்பிட பாக்கியா எதுவும் பேசாமல் இருக்க மற்றவர்கள் அனைவரும் செல்வியை வீட்டை விட்டு அனுப்ப அழுது கொண்டே வெளியேறுகிறார்.

பாக்யா வீட்டிலிருந்து செல்வி அழுது கொண்டே வர பக்கம் பக்கத்தினர் ஏதாவது பிரச்சனையா ஒரே சண்டையா இருந்தது என்று கேட்க செல்வி எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று விடுகிறார்.போகும் வழியில் என் பையன் அப்படி பண்ணி இருக்க மாட்டான் என அழுது கொண்டே தனியாக பேசிக்கொண்டு செல்கிறார்.

நடந்து கொண்டே வரும்போது ஆகாஷ் ரெஸ்டாரண்டுக்கு வந்தது இனியாவிடம் பேசியது என அனைத்தையும் நினைத்து பார்த்துவிட்டு உடனே போன் போட்டு இன்னும் பத்து நிமிஷத்துல நீ வீட்ல இருக்கணும் என சொல்லி போனை வைக்க செல்வி வீட்டுக்கு வந்தவுடன் ஆகாஷை என்ன செய்கிறார்? ஆகாஷ் என்ன சொல்ல போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 08-03-25
baakiyalakshimi serial today episode update 08-03-25