Web Ads

ரெசார்ட்டுக்கு வந்த சுந்தரவல்லி, அர்ச்சனா போட்ட பிளான்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 08-03-25
Moondru Mudichu Serial Today Promo Update 08-03-25

நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லி சுரேகா மூவரும் காபி குடித்துக் கொண்டிருக்க ரேணுகா துவைக்கிற துணி எதுன்னு சொல்லுங்க நான் எடுத்துக்கிறேன் என்று சொல்ல சுரேகா ரூம்ல தனியா போட்டு இருக்கேன் பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே மாதவி ரேணுகாவிடம் இன்னுமா நந்தினி வரல என்று கேட்கிறார். எனக்கு எதுவும் தெரியாது என்கிட்ட எதுவும் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட அசோகன் எதுக்குமா கேட்கிற என்று சொல்லுகிறார். அவங்க நேத்து கோவிலுக்கு போனாங்க எப்படி இருந்தாலும் நைட்டே வந்து இருக்கணும் இல்ல என்று பேசிக் கொண்டிருக்க சுரேகா பத்தாயிரம் எனக்கு வேண்டும் என்று கேட்கிறார்.

10,000 எதுக்கு என்று சுந்தரவல்லி கேட்க அதற்கு என் பிரண்டுக்கு பர்த்டே என்று சொல்லிவிட்டு அவருக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும் என்று சொல்லுகிறார் ஐயாயிரம் கொடுக்கிறேன் என்று சொல்ல சுரேகா சம்மதிக்கிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் சூர்யா மற்றும் நந்தினியை போட்டோ எடுத்த போட்டோகிராபர் வருகிறார். மாதவி என்ன போட்டோ என்று விசாரிக்க நேத்து போட்டோ சூட் எடுத்தாங்க அதுல எது நல்லா இருக்க போட்டோ சூஸ் பண்ணி கொடுத்தீங்கன்னா நாங்க அத வச்சு டிசைன் பண்ணிடுவோம் என்று சொல்ல, என்ன சொல்றீங்க என்று மாதவி கேட்கிறார். அருணாச்சலம் சார் ஈசிஆர் ரெசார்ட்டில் போட்டோ ஷூட் எடுக்க சொன்னாரு. என்று சொல்லி நந்தினியும் சூர்யாவும் ஜோடியாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை லேப்டாப்பில் ஓபன் பண்ணி காட்டுகிறார்.

இது எப்ப நடந்துச்சு என்று கேட்க நேத்து என்று அந்தப் பெண் சொல்லுகிறார் இதை எடுக்க சொன்னது யார் என்று கேட்க அருணாச்சலம் சார் எடுக்க சொன்னாரு இதுல எதுன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் என்று சொல்ல லேப்டாப் வச்சுட்டு போங்க நாங்க அப்புறம் கொடுத்து விடுகிறோம் என்றுசொல்லிவிட்டு அவர்களை அனுப்பி வைக்கின்றனர். உடனே கோவப்பட்ட மாதவி அப்பா என்னம்மா இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காரு கோவிலுக்கு போயிருக்காங்கன்னு வேற சொல்றாரு ஆனா அவரு ஹனிமூன் அனுப்பி வச்சுருக்காரு என்று கோபப்பட்டு பேச சுந்தரவல்லி அமைதியாகவே இருக்கிறார் அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வர, சுந்தரவல்லி என்ன சூர்யாவை ஆளை காணோம் என்று தெரியாதது போல் விசாரிக்க அதான் கோவிலுக்கு போய் இருக்காங்க என்று சொன்னேனே என்று சொல்ல நேத்து போனவங்க இன்னும் வரவில்லை என்று கேட்க அருணாச்சலம் எதையெதையோ சொல்லி சமாளிக்கிறார்.

அப்போ இதுக்கு பேர் என்ன என்று லேப்டாப்பை திருப்பி காட்டுகிறார். வீட்ல எத்தனை பேர் இருந்தோம் யார்கிட்டயும் எதுவும் சொல்லாம அவங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பி இருக்கீங்க.என்ன முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க எதுக்கு இது மாதிரி வேலையை பார்த்துக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்பட்டு கேட்கிறார். உடனே மாதவி உங்களுக்கு இன்னும் புரியலையா நந்தினிக்கு குழந்தை பொறந்தா அவளை இங்கே தங்க வச்சுடலாம்னு பாக்குறாரு என்று சொல்ல உடனே டென்ஷன் ஆகி எழுந்த சுந்தரவல்லி நீ ஒரு குழந்தையை பெற்று இருந்தால் இவருக்கு இந்த மாதிரி நினைப்பு வந்திருக்குமா என்று கேட்கிறார். உடனே மாதவி என் பிரச்சனையை விடுங்க அவங்கள எதுக்கு அனுப்பி வச்சாங்கன்னு கேளுங்க என்று சொல்லுகிறார்.

உடனே அருணாச்சலம் ஹனிமூன் எல்லா அனுப்பல அவன் ஹாஸ்பிடல்ல இருந்து வந்து இருக்கான் அதனால கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கேன் என்று சொல்ல உடனே மாதவி வாங்க அங்க போய் பார்க்கலாம் என்று சொல்ல அருணாச்சலம் எதுக்கு அங்கெல்லாம் போய்கிட்டு என்று சொல்ல நாங்க மட்டும் இல்ல நீங்களும் சேர்ந்து தான் வரீங்க என்று அனைவரும் காரில் கிளம்புகின்றனர்.

மறுபக்கம் விஜியும் நந்தினியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அர்ச்சனா இவ உன்னோட பெஸ்ட் பிரண்டா அப்ப இவ மேல ஒரு கண்ணு இருக்கணும் நந்தினி ஏத்தி விடுறவ இவதான் என்று யோசிக்கிறார். நீ எதுக்கு அவ பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க என்று கேட்ப பின்னாடி எல்லாம் சுத்தல அவங்க என்கிட்ட நல்லா பேசுனாங்க நானும் பேசினேன் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் அவங்களுக்கு உங்ககிட்ட பேசணும்னு என்ன இருக்கு. ஒருத்தர் கூட கல்யாணம் நடக்கிறது நின்னா அவங்க கூட விரோதமா தான் இருக்கும் விரோதமா இல்லனாலும் நல்ல விதமா பேசுறதுன்றது என்னால ஏத்துக்க முடியல அதுவும் இல்லாம நீ எதுக்கு நைட்டு அவ ரூம்ல தூங்குற, நீ அவ ரூம்ல தூங்க தான் இங்க வந்தியா என்று சொல்ல, நீங்க எல்லாரும் அவங்கள பத்தி தப்பா நினைச்சு இருக்கீங்க என்று தோணுது ஆனால் நீங்க யாரையுமே இவ்வளவு கோபமா பேசியிருக்க மாட்டீங்க நீங்க இப்படி பேசுறது தான் ஆச்சரியமா இருக்கு என்று சொல்ல, நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது நாளைக்கு அவளை பத்தி எல்லாம் உனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் நீங்க அன்னைக்கே சொன்னீங்கன்னு நீ சொல்லுவ என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் அதே ரெசார்ட்டில் சுந்தரவல்லி வீட்டில் ஏசி மெக்கானிக் என பொய் சொல்லி நந்தினி இருக்கும்போது நகையை திருடிய திருடர்கள் அர்ச்சனாவை பார்த்து இவங்க எங்க இருக்காங்க ஏதாவது அசைன்மென்ட் கிடைக்குதா பாக்கலாம் என்று அர்ச்சனாவிடம் வந்து பேசுகின்றனர் அவர் நீங்க இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். ஏதாவது அசைன்மென்ட் இருந்தா கொடுங்க என்று கேட்க நீங்க எதுக்கு இங்க வந்தீங்க இங்கிருந்து முதலில் போங்க என்று அவர்களை போக சொல்ல, நந்தினி அவர்களை பார்த்து விடுகிறார். உடனே அவர்கள் அந்தப் பொண்ணு பார்த்துடுச்சு என்று சொல்ல, பாத்துட்டால இப்ப அசைன்மென்ட் கேட்டீங்கல்ல நான் சொல்றேன் என்று அந்த திருடர்களிடம் அர்ச்சனா எதையோ சொல்லுகிறார் உடனே நந்தினி உங்ககிட்ட பேசிகிட்டு இருந்தாங்களே அவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா என்று கேட்கிறார்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல ரூம் நம்பர் கேட்டாங்க சொன்னேன் என்று சொல்ல அர்ச்சனா ஒரு ரூம் நம்பரை சொல்லி அனுப்புகிறார். உடனே நந்தினி அந்த ரூமுக்கு வந்து கதவை தட்ட அவர்கள் இருவரும் நந்தினிக்கு மயக்கம் மருந்தை முகத்தில் அழுத்தி மயக்கம் போட வைக்கிறார். இருந்த ஒரு எதிரியும் இப்போ டிஸ்டர்ப் பண்ண இல்ல என்று சொல்லிவிட்டு விவேக் விஜி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து இவங்க நம்ம சூர்யா கூட தனியா இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணுவாங்க இங்க இருந்து இவங்களை எப்படி அனுப்புவது என்று யோசித்து விட்டு செல்கிறார்.

இந்த ரெசார்ட்டுக்கு வரவங்களுக்கு ஒரு ஆஃபர் இருக்கு, பக்கத்துல இருக்கிற டெக்ஸ்டைல்ஸ்ல டிரஸ் எடுக்குறவங்களுக்கு 80% ஃபிரீ என்றும், அதுவும் இன்னைக்கு மட்டும் தான் இருக்கு நீங்க யூஸ் பண்ணிக்கிறீங்களா என்று கேட்க விவேக் உடனே வாங்கி விஜியை அழைத்து சென்று விடுகிறார். உடனே அர்ச்சனா சந்தோஷப்பட மறுபக்கம் சூர்யா ஃபுல் போதையில் வேறு ஒரு சரக்கு வேண்டும் என்று மேனேஜரிடம் சண்டை போட்டு கொஞ்ச நேரத்தில் படுத்துகிறார். ரூமுக்கு வந்த அர்ச்சனா சரக்கை ஊற்றி மீண்டும் சூரியாவை எழுப்பி கொடுக்க என்ன மேனேஜர் டிரஸ் மாத்திட்டீங்களா என்று கேட்கிறார். உடனே கொஞ்ச நேரத்தில் நீ யாரென்று கேட்கிறார் அந்த அளவிற்கு சூர்யா சுயநினைவு இல்லாமல் குடித்திருக்கிறார். அர்ச்சனா பேசிக்கொண்டே இருக்க சூர்யா போதையில் அப்படியே படுத்து விடுகிறார் மறுபக்கம் நந்தினி மயக்கத்தில் இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் சூர்யா என்று அர்ச்சனா சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் சூர்யா,சூர்யா என கத்திக்கொண்டு வருகின்றனர்.

உடனே அர்ச்சனா அந்த இரண்டு நபர்களுக்கு போன் போட்டு நம்ம நினைச்ச மாதிரி பிரச்சனை பெருசா இருக்கு நீங்க உடனே அங்கிருந்து போயிடுங்க என்று சொல்லி அனுப்பி விடுகிறார். சூர்யா போதையில் இருக்க நந்தினி எங்க இருக்கா என்று அருணாச்சலம் கேட்க நந்தினியை காணம் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 08-03-25
Moondru Mudichu Serial Today Promo Update 08-03-25