Web Ads

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியலை முழங்கும் கொள்கை பாடல்களா?

‘ஜனநாயகன்’ படத்தில் 5 பாடல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

பரபரப்பான சினிமா-அரசியல் சூழலில் விஜய் நடிக்கும் கடைசிப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அரசியல் பேசும் இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. விஜய் 15 நாட்கள் அரசியலுக்கு 15 நாட்கள் படத்திற்கு என ஒதுக்கியுள்ளதாக தகவல் வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் வரை நீடிக்கும் என தெரிகிறது.

இச்சூழலில், சட்டமன்ற தேர்தலை மனதிற்கொண்டு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதெனவும், அதில் 3 பாடல்கள் அரசியல் எழுச்சியாய் முழங்கும் எனவும் கூறப்படுகிறது.

அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தில் 5 பாடல் காட்சிகள் இருப்பது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இதனால், வெளியாகவிருக்கும் லிரிக்கல் வீடியோ மெகா ரீச்சாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ‘ஜனநாயகன்’ படத்தின் பாடல் வரிகள் என்ன சொல்ல வருகிறது என்ற வகையில், அது பேசுபொருளாக மாறக்கூடும் எனவும் இப்போதே திரை ஆர்வலர்களால் கணிக்கப்படுகிறது. எப்படியோ, இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரட்டும், பொறுத்திருந்து பார்ப்போம்.!

vijay in jananayagan movie songs update
vijay in jananayagan movie songs update