சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறார்?
ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 பட அப்டேட் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கும் ஜெயிலர்2-ம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறாரா? இது பற்றிப் பார்ப்போம்..
லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் அமீர்கான் போல, ஜெயிலர்-2 படத்திலும் ஷாருக்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷாருக்கான் இனி கேமியோ ரோலில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்.
இதனால், சன்னி டியோலாக இருக்குமோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவரை, ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக களமிறக்க நெல்சன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த வாரம், சென்னையில் தொடங்கும் முதற்கட்ட படப்பிடிப்பு 14 நாட்களில் முடிவடைகிறது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு, கேரளாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இது குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் ரஜினி போர்ஷன் முடிவடைந்து விட்டது. ரஜினி கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பெயர் தேவா. இதில் ரஜினிகாந்துக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
