வயிற்று வலியும் துடிக்கும் விஜயா,மனோஜ்.. அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
வயிற்று வலியில் விஜயாவும் மனோஜும் துடித்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா விடம் சிந்தாமணி வம்பு இழுக்க மீனா விஜயாவிடம் நான் கண்டிப்பா இந்த தொழில்ல ஜெயிப்பேனு சொல்லுங்க அத்தை என்று சொல்ல ஜெயிக்க முடியுமான்னு கேட்டவளே நான்தான் என்னையே சொல்ல சொல்றியா அவங்க அந்த தொழில்ல கொடிக்கட்டி பறந்துகிட்டு இருக்காங்க நீ இப்பதான் ஆரம்பிச்சிருக்க உன்னால எப்படி செய்ய முடியும் என்று சொல்ல என்னால் முடியும் நான் கண்டிப்பா செய்வேன் என சொல்லுகிறார்.
ஆனால் உடனே சிந்தாமணி போட்டியா வந்தா நான் ஓட விட்டுவிடுவேன் என்று சொல்ல மீனா நீங்க எங்க அத்தை கிட்ட நல்லா டான்ஸ் கத்துக்கோங்க தொழில் போச்சுன்னா டான்ஸ் கிளாஸ் வச்சி பிழைத்துப்பீங்க என்று சொல்ல விஜயா அதிர்ச்சியாகிறார் உடனே அங்கேயும் என்னை தவிர வேற யாரும் இருக்கக்கூடாதுன்னு சொல்லி இவங்களையே ஓட விட்டுருவாங்க என்று சொல்ல எதுக்கு தேவையில்லாத எல்லாம் பேசிக்கிட்டு இருக்க என்று விஜயா கேட்கிறார் ஏற்கனவே வாய் இதெல்லாம் முத்து கூட சேர்ந்து ஓவரா பேசிக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார். மறுபக்கம் அனைவரும் சாப்பிட உட்கார விஜயா மனோஜிடம் அந்த டயட் ஃபுட் சாப்பிட்டதிலிருந்து சோர்வாகவே இல்ல நல்லா எனர்ஜியா இருக்கு என்று சொல்ல அதற்கு மனோஜ் உடனே டேப் எடுத்து ரோகினி இடம் கொடுத்து அளக்க சொல்லுகிறார் இடுப்பு அளவை எடுக்க சொல்ல நான் இன்னைக்கு ரெண்டு வேலை சாப்பிட்டதில்லையே குறைஞ்சிருக்கேன் என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர்.
விஜயா இரண்டு வேலை சாப்பிட்ட உடனே எப்படி குறைய முடியும் என்று கேட்க முத்து எனக்கென்னமோ ஒரு சுத்து ஏறின மாதிரி தான் இருக்கும் என்று கிண்டல் அடைகிறார். உடனே மீனா விஜயாவிற்கு டயட் சாப்பாடு கொடுக்க, எனக்கு எங்கே என்று மனோஜ் கேட்கிறார். நீங்களே போய் எடுத்துக்கோங்க என்று சொல்ல அதற்கு மனோஜ் எல்லாத்துக்கும் சேர்த்து தானே காசு வாங்குறீங்க என்று கேட்க சமைக்கிறதுக்கு மட்டும் தான் இஷ்டம் இருந்தால் எடுத்துக்கோங்க என்று சொல்ல அப்படி இல்லன்னா அதுக்கும் காசு ஆகும் என்று கேட்க உடனே ரோகினி நான் இப்ப எடுத்துக்கிறேன் என சொல்லி எடுத்து வருகிறார்.
அந்த நேரம் பார்த்து ரவியும் ஸ்ருதியும் வர மீனா அவர்களை சாப்பிட உட்கார வைத்து சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று சொல்ல அவங்களுக்கு மட்டும் எடுத்து வைக்கிற அப்ப எனக்கு மட்டும் ஏன் வைக்கலை என்று கேட்க உங்களை எனக்கு பிடிக்காது அதனால தான் என்று ஓபன் ஆக சொல்லிவிடுகிறார். உடனே ரவியும் ஸ்ருதியும் எங்களுக்கு சாப்பாடு வேண்டாம் நாங்க பீட்சா சாப்பிடணும் போல இருந்தது அதனால வாங்கிட்டு வந்திருக்கோம் என்று சொல்ல மீனா எதுக்கு ரவி இதெல்லாம் வெளிய வாங்கிக்கிட்டு என்று கேட்க இல்ல அண்ணி நானே என்னோட கையால செஞ்சது நம்ம ஊர் இன்கிரிடியன்ஸ் போட்டு செஞ்சிருக்க எல்லாரும் டேஸ்ட் பண்ணி பாருங்க என்று கொடுக்க விஜயா மனோஜ் திரு திரு என முழிக்கின்றனர் அனைவரும் சாப்பிட்டு பார்த்துவிட்டு சூப்பராக இருக்கு என்று சொல்ல, ரவி நீங்க ரெண்டு பேரும் எடுத்துக்கோங்க அம்மா என்று சொல்லுகிறார். உடனே முத்து அவங்கதான் டயட்ல இருக்காங்களே என்று சொல்ல ஆமா நாங்க அது சாப்பிட மாட்டோம் என விஜயா சொல்லுகிறார் உடனே டயட் ஃபுட் வாயில் வைத்துவிட்டு இதில் என்ன உப்பு வரப்பு எதுவுமே இல்லாம இருக்கு என்று சொல்லி மீனாவை திட்ட அவங்க அப்படித்தான் சமைக்க சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார்.
அண்ணாமலை எதுக்கு விஜயா இதெல்லாம் புடிச்சது கொஞ்சமாக சாப்பிட்டு நடந்தாவே ஒன்னும் ஆகாது ஆரோக்கியமா இருக்கலாம் என்று சொல்ல சுருதியும் அங்கிள் சொல்றது கரெக்ட் தானே எதுக்கு டயட் எல்லாம் என்று சொல்லுகிறார். விஜயா அப்பயும் உடம்பு குறைப்பதில் உறுதியாக இருந்துவிட்டு எனக்கு இதே மாதிரி டெய்லியும் செஞ்சு தரணும் ரெண்டு நாள் செஞ்சிட்டு அப்புறம் விட்டுட கூடாது மீனா என்று சொல்ல முத்து உனக்கு நாலு கழிச்சு ஒரு ஆர்டர் இருக்கு என்று சொல்ல மீனா ஆமாம் என்று சொல்லி இப்பயாவது ஞாபகப்படுத்து நீங்களே என்று சொல்லுகிறார் ஆர்டர் இருக்கிற அன்னைக்கு மீனா செய்ய மாட்டார் என்று சொல்ல அப்போ நாங்க எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறார். நான் காலையில சமைச்சு வச்சுட்டு போறேன் என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல மீனா ஆர்டர் இருக்கும்போது சமைக்க மாட்டா ஒரு வேலை பட்டினியா இருங்க அப்பயும் உடம்பு குறையும் என்று முத்து கிண்டல் அடிக்கிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் டயட் வேண்டாம் நார்மலா சாப்பிட்டு இருங்க என்று சொல்ல விஜயா உடனே நான் சொல்றது தான் இந்த வீட்ல நடக்கணும் அப்படி செய்றவங்களா இருந்தா இருக்கட்டும் இல்லனா போகட்டும் என்று சொல்ல முத்து எங்க போகணும் என்று கேட்கிறார் எங்கேயாவது போங்க என்று சொல்ல அண்ணாமலை உனக்கு வாய் அதிகமா இருக்கு கொஞ்சம் அடக்கி பேச்சு என்று சொல்லுகிறார்.
உடனே மனோஜ் உங்க பேச்சை கேட்கலானா போக சொல்லுங்க என்று சொல்ல அவங்க வழக்கம் போல பேசிகிட்டு இருக்காங்க ஆனா நீ ஒத்து ஊதுனனா செவுள் பிஞ்சிரும் என்று முத்து மிரட்ட ரோகினி மனோஜ் அமைதியாக சாப்பிட சொல்லுகிறார். மனோஜ் தூங்கிக் கொண்டிருக்க ஏதோ சத்தம் கேட்கிறது என்று எழுந்து பார்க்க அவருடைய வயிற்றில் சத்தம் கேட்பதை பார்த்து வயிறு வலிக்குது என்று துடிக்கிறார் உடனே பாத்ரூம் போக மறுபக்கம் விஜயாகும் இதே வலியில் துடித்து பாத்ரூம் ஓடுகிறார். மாறி மாறி இரண்டு பேரும் மூன்று நான்கு முறை பாத்ரூம் போய்விட்டு ரூமில் இருந்து வெளியே வந்து வைத்து வலியில் துடிக்க உங்களுக்கும் இருக்கா உனக்கும் இருக்காடா என்று பேசிக் கொள்கின்றனர்.
பிறகு விஜயாவும் மனோஜ் என்ன செய்கின்றனர்? அண்ணாமலை என்ன கேட்கிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
