Web Ads

போதை ஏறும் சந்தோஷத்தில் சூர்யா, குழப்பத்தில் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 26-02-25
Moondru Mudichu Serial Today Promo Update 26-02-25

நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்காக நாட்டுக்கோழி நண்டு என கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கிறார். ரேணுகா இன்னைக்கு என்ன கோழி நண்டு எல்லாம் இருக்கு என்று கேட்க சூர்யா சாருக்கு உடம்பு சரியில்ல அவருக்கு கொஞ்சம் காரசாரமா செஞ்சு கொடுக்கலாம்னு தான் என்று சொல்ல ரேணுகா கோழி கிளீன் பண்றீங்க நண்டு கிளீன் பண்றீங்க எல்லாமே தெரிஞ்சிருக்கிங்க என்று சொல்ல எங்க ஊர்ல எல்லாத்தையுமே கிளீன் பண்ணி செஞ்சிருக்கோம் என்று சொல்ல, அப்போ உங்க ஊர்ல எல்லாமே ஃப்ரீயா கிடைக்குமா என்று கேட்க ஆற்றில் மட்டும் மீன் பிரியா கிடைக்கும் மத்தபடி எல்லாமே காசு கொடுத்து தான் வாங்கணும் என்று சொல்ல சரி நீ மஞ்ச தூள் போட்டு நண்டு கழுவிவை என்று சொல்லுகிறார்.

ரேணுகா நண்டு கழுவிக்கொண்டே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாருக்கா வந்தது என்று தெரியாதது போல் கேட்க, அது வந்து அவங்க யாருனா என்று தயங்க சொல்லக்கூடாதுனா விட்டுருங்க என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல முதல்ல சூர்யா சாருக்கோ அவங்களுக்கும் தான் கல்யாணம் ஆயிருக்கணும் என்று சூர்யா மண மேடையில் மாற்றி தாலி கட்டிய விஷயத்தை ரேணுகாவிடம் நந்தினி சொல்லுகிறார். அப்போ உங்களுக்கு திடீர் கல்யாணமா? அர்ச்சனம்மா வாழ வேண்டிய வாழ்க்கை தான் நீங்க வாழ்ந்துகிட்டு இருக்கீங்களா அப்போ உங்க கழுத்துல இருக்குற தாலி அர்ச்சனா அம்மாவோட கழுத்துல இருக்க வேண்டியது அப்படித்தானே, என்று நந்தினி இடம் கேள்வி மேல் கேள்வி கேட்க அந்த நேரம் பார்த்து வந்த கல்யாணம் ஏற்கனவே புஷ்பா என்ற ஒருத்தி தேவை இல்லாத விஷயத்தில் மூக்கை நுழைச்சு ஐயா சீட்ட கிழிச்சு அனுப்பிட்டாரு நீயும் அது மாதிரி இருக்காத ஒழுங்கா வேலையை பாரு என்று சொல்ல நான் அப்படியெல்லாம் இல்லை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார்.

பிறகு நந்தினி கல்யாணத்திடம் நீங்க சிக்கன் வெட்டி கழுவுங்கள் என்று சொல்லி நந்தினி சொல்ல அந்த நேரம் பார்த்து அர்ச்சனா ரேணுகாவிற்கு ஃபோன் போட, சுந்தரவல்லி பக்கத்தில் வந்து யாருது இந்த போன் என்று கேட்பதற்குள் ஆஃப் ஆகிவிடுகிறது. உடனே கல்யாணம் அங்கு வந்து போனை பார்க்க யார் இது என்று யோசிக்கிறார். உடனே ரேணுகா எங்க சொந்தக்காரங்க என்று போனை புடுங்கி விட்டு தனியாக வந்து அர்ச்சனாவிடம் பேசுகிறார். நான் வந்ததுக்கப்புறம் அந்த வீடு எப்படி இருக்கு என்று சொல்ல புயல் அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு எல்லாரும் அர்ச்சனா எதுக்கு வந்திருப்பா என்று யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க என்று சொல்ல அந்த நந்தினி என்ன நினைக்கிறா என்று கேட்கிறார். அவங்க உங்கள முழுசா நம்பிட்டாங்க அர்ச்சனம்மா அர்ச்சனம்மான்னு சொல்லி பெருமையா பேசுறாங்க என்று சொல்லிவிட்டு உடனே நான் இன்னொரு விஷயம் பண்ணியாகணும் என்று சொல்லுகிறார். ஓ அடுத்த அடியா என்று ரேணுகா கேட்க அர்ச்சனா நம்ப அடிக்கிற ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இருக்கணும் என்று சொல்லிவிட்டு, நேராக சூர்யா ரூமுக்கு போ என்று ரேணுகாவிடம் எதையோ சொல்லிவிட்டு, சொன்ன வேலையை கச்சிதமா முடி என சொல்லி போன வைக்கிறார்.

நந்தினி கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்க சூர்யா வெளியில் போன் பேசிக் கொண்டிருப்பதை கவனித்து ரேணுகா சூர்யாவின் ரூமுக்குள் சென்று தேடுகிறார். என்ன ஒண்ணுமே காணம் அர்ச்சனம்மா இங்க தானே வச்சிருக்கேன்னு சொன்னாங்க என்று தேட கட்டில் அடியில் இருந்து ஒரு பாக்கெட் எடுக்கிறார் அதில் புத்தம் புதிய சரக்கு பாட்டில் ஒன்று இருக்கிறது. அதை கையில் எடுத்த ரேணுகா அச்சனம்மா சொன்ன மாதிரி இத சூர்யா சாருக்கு தெரியிற மாதிரி வைக்கணும் என்று முடிவு எடுத்து எங்கே வைப்பது என யோசித்து விட்டு எதிரிலேயே வைத்துவிடுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி சூர்யாவிற்காக சாப்பாடு எடுத்துக்கொண்டு ரூமுக்கு வருகிறார்.

உடனே நந்தினி வந்தவுடன் நீ இங்கே என்ன ரேனு பண்ற போன் பேச தானே போன என்று கேட்க, இல்ல நீங்க கிச்சன்ல வேலை பாத்துட்டு இருந்தீங்க அதனால வீடு கூட்டலாம்னு வந்தேன் என்று சொல்லகையில வெளக்கமாத்தையே காணோம் என்று கேட்கிறார். உடனே ரூமில் தேடுவது போல் செய்துவிட்டு இங்கு இல்லை நான் போய் வெளியே எடுத்துட்டு வந்து கூட்டி விடுறேன் என சொல்லிவிட்டு சென்றுவிட சூரியா பசியில் ரூமுக்கு வருகிறார். ரெடியா இருக்கு சார் ஒன்னு நாட்டுக்கோழி சூப்பு ஒன்னு நண்டு சூப் என்றும் சொல்லிக் கொடுக்க சூர்யா டேஸ்ட் பண்ணி சூப்பராக இருக்கு என்று சொல்லுகிறார். அப்போ குழம்பும் டேஸ்டா தான் இருக்கும் என்று சொல்ல குழம்பு வேற இருக்கா என்று கேட்க நாட்டுக்கோழி குழம்பும், நண்டு கிரேவியும் வெச்சிருக்கேன் சோறு வடிச்ச உடன் சாப்பிடலாம் என்று சொல்ல சூப்பர் என்று சொல்லுகிறார். நீ சூப்பரா சமைக்கிற நந்தினி என்று சொல்ல எங்க வீட்ல அக்கா தங்கச்சி இரண்டு பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீங்க குடிங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே சூர்யா சூப்பரான சைடிஷ் இருக்கு ஆனா சரக்கு இல்லையே இந்த சூரியாவுக்கே இந்த நிலைமையா என்று சொல்லிவிட்டு சரக்கு பாட்டில்களிடம் வந்து புலம்ப ஆரம்பிக்கிறார். ரேணுகா வைத்த புது சரக்கு பாட்டிலின் பக்கத்தில் சூர்யா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அந்த சரக்கு பாட்டிலை சூர்யா பார்த்து கையில் எடுக்கிறார். உடனே கையில் எடுத்து மோந்து பார்க்க சரக்கு மாதிரி தான் இருக்கு என்று சொல்லி நான் ஏதாவது மன பிராந்தில உளரனா என்று அவரே பேசிக்கொள்கிறார்.

உடனே மீண்டும் மோந்து பார்த்துவிட்டு சரக்குதான் நம்ம பிராண்ட் மாதிரியே இருக்கே என்று கொஞ்சம் கையில் ஊற்றி ஒரு வாய் குடித்துப்பாக்க ஒரிஜினல் ஃபாரின் சரக்கு எனக்கு புடிச்ச பிராண்ட் என்று சூர்யா சந்தோஷப்படுகிறார். இது எப்படி இங்க வந்துச்சு என்று யோசிக்க அது எல்லாம் அப்புறம் யோசிச்சுபோ இந்த சிறப்பான சைடிஷ் இந்த சிறப்பான சரக்கு குடிச்சிடுவோம் என்று கடவுளுக்கு நன்றி சொல்லுகிறார். உடனே சந்தோஷத்தில் சூர்யா எவ்வளவு நாள் ஆச்சு என்று பேசிவிட்டு, சரக்கு பாட்டிலே கையில் வைத்துக்கொண்டு நீ ஒரிஜினல் எனக்கு தெரியுது ஆனா நீ எனக்கு போதை ஏத்துவியா இல்லையா சொல்லு என்று சரக்கு பாட்டலிடம் கேட்கிறார். உடனே கடவுள் ப்ரோ என்ன தயவு செஞ்சு ஏமாத்திடாதீங்க என்று சொல்லிவிட்டு கொஞ்சம் போதை ஏறும் இல்ல ப்ரோ என்று பேசுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி வந்துவிட சூர்யா மறுபக்கம் போதையாக வேண்டும் என்று கடவுளிடம் தீவிரமாக வேண்டிக் கொள்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சந்தோஷமாக அருணாச்சலத்திடம் போத ஏறுது டேடி என்று கத்தி சொல்லுகிறார். நந்தினி கல்யாணத்திடம் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டு தான் இருந்தேன் அப்படியும் மீறி அந்த ரூமுக்குள்ள எப்படி சரக்கு பாட்டில் போச்சுன்னு தெரியல என்று சொல்லுகிறார்.

அங்கு வந்த அருணாச்சலம் கெட்ட வழிக்கு ஒருத்தனை ஈஸியா கூட்டிட்டு போகலாம் ஆனால் அதுவே அவன நல்ல வழிக்கு கூட்டிட்டு போறது தான் கஷ்டம் என சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 26-02-25
Moondru Mudichu Serial Today Promo Update 26-02-25