
பிறந்தநாளில் ஈஸ்வரி கொடுத்த ஷாக், பாக்கியாவின் முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பிறந்தநாளில் ஈஸ்வரி அதிர்ச்சி கொடுக்க பாக்யா என்ன முடிவு எடுத்துள்ளார் என்று பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிற்காக சப்ரைசாக வீடியோக்களை எடுத்து அதனை போடச் சொல்லுகிறார். அப்போது முதலில் பாக்யாவின் தமிழ் ஆசிரியர் பேச பாக்யா கண்கலங்குகிறார் அவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார்.
அதன் பிறகு பாக்யாவிற்கு தெரிந்தவர்கள் ஃப்ரெண்ட் மளிகை கடைக்காரர் என பலரும் பாக்கியவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். இது மட்டும் இல்லாமல் ஜெனி நான் செழியனை கல்யாணம் பண்றதுக்கு முதல் காரணம் நீங்கதான் நீங்க ரொம்ப அன்பானவங்க என்று சொல்லி வாழ்த்து சொல்லுகிறார். உடனே அமிர்தாவும் நானும் எழிலும் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படும்போது கை கொடுத்தவர்க நீங்க இப்ப நாங்க சந்தோஷமா இருக்கோரம் அதுக்கு காரணம் நீங்கதான் என்று சொல்லுகிறார்.
அவரும் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிறகு ராதிகா பேசுகிறார். உங்கள பத்தி எவ்வளவு நேரம் வேணாலும் பேசலாம் பாக்கியா. ஆனா இனியா 30 செகண்டுனு சொல்லிட்டா அதனால கொஞ்சமா பேச வேண்டியது ஆயிடுச்சு நான் உங்களை நினைச்சு ரொம்ப பெருமைப்பட்டு இருக்கேன் அதே மாதிரி பொறாமையும் பற்றிருக்கேன் நீங்க அந்த அளவுக்கு மத்தவங்களுக்கு உதவி பண்ணி இருக்கீங்க என்று சொல்லி வாழ்த்து சொல்லுகிறார். பிறகு செல்வி பேசும்போதே கண்கலங்கி பேசுகிறார். நான் இந்த வீட்ல மாதிரி நிறைய வீட்ல வேலை செய்ற ஆனா மத்தவங்க என்ன மனிசியாவே மதிக்க மாட்டாங்க ஆனா அக்கா எனக்கு ஒரு நல்ல பிரண்டா தான் இருந்திருக்கு பிசினஸ் எல்லாம் எப்படி பண்ணனும்னு சொல்லி கொடுத்திருக்கு என் பையன படிக்க வச்சிருக்க எனக்கு எவ்வளவு உதவி பண்ணி இருக்கு என்று கண் கலங்கி அழ பாக்யாவும் கண் கலங்குகிறார்.
நீ நூறு வயசுக்கு நல்லா இருக்கணும் அக்கா என்று கண்கலங்கி கொண்டே வாழ்த்து சொல்லுகிறார். பிறகு நிலா பாப்பா பாக்கியலட்சுமி பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர். உடனே ஈஸ்வரி நீ மட்டும் தான் வாழ்த்து சொல்லுவியா நானும் சொல்லுவேன் என மைக்கை வாங்கி பாக்யாவை பக்கத்தில் கூப்பிடுகிறார். பாக்கியாக நான் என்னைக்கும் என்னோட மருமகளா பார்த்ததில்லை என்னோட மகளாக பார்க்கிறேன் அவ வாழ்க்கையில முன்னேற ரொம்ப சந்தோஷம் அதே மாதிரி ஒரு வாழ்க்கை துணை இருந்தாலும் லைஃப்ல முழுமை அடைய முடியும் என்று சொல்லிவிட்டு கோபியை பாக்யா பக்கத்தில் கூப்பிட்டு இருக்க வைத்து கோபியும் பாக்யாவும் இப்போ ஒரே வீட்ல தான் இருக்காங்க அவங்க கூடிய சீக்கிரமே சேர்ந்து வாழ போறாங்க என்று சொன்னவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் விரைவில் இவர்களை இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கும் என்று ஈஸ்வரி சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார். இதுதான் என்னோட பிறந்த நாள் கிப்ட் என்று சொல்ல உடனே பாக்யா மைக் வாங்கி பேசுகிறார். பாக்யா பதில் என்ன? ஈஸ்வரி என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
