அண்ணாமலை கேட்ட கேள்வி, பாட்டி வைத்த டுவிஸ்ட், ரோகினியின் பதில் என்ன? சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கறிக்கடைக்காரர் மணி ரோகிணி குறித்த உண்மையை வீட்டில் சொல்லிவிட விஜயா ரோகினியை அடித்து வெளியே துரத்துகிறார்.
இதனால் ரோகிணி வித்யா வீட்டிலும், கோபத்தில் விஜயா பார்வதி வீட்டிலும் இருக்கின்றனர். மனோஜ் ரோகினி ஏமாற்றியதை நினைத்து குடித்துக்கொண்டிருக்க அண்ணாமலை மனமுடைந்து இந்த பிரச்சனையை தீர்க்க அம்மாவால்தான் முடியும் என்று அவரை அழைத்து வர முடிவு செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து வெளியான அடுத்த வாரம் ப்ரோமோவில் குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்திருக்க ரோகிணி நின்று கொண்டிருக்கிறார். விஜயா இவ நான் கொண்டு வந்த மருமக தானே நானே ரெண்டு சாத்து சாத்துறேன் என வேகமாக வந்து கன்னத்தில் இரண்டு அரை விடுகிறார்.
மீனா கையில் கற்பூரம் தட்டுடன் இருக்க பாட்டி இனிமே இந்த வீட்டுக்கு உண்மையான மருமகளாக இருப்பேன் என சொல்லி ரோகினிடம் சத்தியம் பண்ண சொல்லி கேட்கிறார். உடனே அண்ணாமலை நாங்க தெரிஞ்சுக்க அவ்வளவுதானா இன்னும் இருக்கா என்று கேட்ட ரோகிணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ரோகிணி என்ன உண்மையை சொல்லப் போகிறார்? சத்தியம் செய்கிறாரா? இல்லையா? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
