Pushpa 2

ஸ்ருதி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி எடுத்த முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

siragadikka asai serial today episode update 20-01-25
siragadikka asai serial today episode update 20-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முதலில் தண்ணி குடம் தூக்கி வரும் போட்டி வைக்கப்படுகிறது. விஜயா ரோகினி தான் ஃபர்ஸ்ட் வருவா என்று சொல்ல அனைவரும் கீழே போட்டு விடுகின்றன. இறுதியாக ரோகிணி மற்றும் மீனா வர ரோகிணியின் குடம் கீழே விழுந்து விடுகிறது. அந்தப் போட்டியில் மீனா ஜெயித்து விடுகிறார் முத்து கைதட்ட போக மீனா மீது இருக்கும் கோபத்தில் கைத்தட்ட அமைதியாக இருக்கிறார். ரோகினியின் குடம் கீழே விழுந்ததும் விஜயாவின் முகம் மாறுகிறது.

பிறகு ஆண்களுக்கு மட்டும் என பிஸ்கட் சாப்பிடும் போட்டி வைக்கின்றனர் அதில் நெத்தியில் பிஸ்கட்டை வைத்து விட்டு கையில் தொடாமல் வாயில் வர வேண்டும் என்பது டாஸ்காக கொடுக்கப்படுகிறது உடனே விஜயா மனோஜ் தான் ஜெயிப்பான் என்று சொல்ல போட்டு ஆரம்பிக்கிறது வழக்கம் போல் அனைவரும் அவுட் ஆகி முத்து ஜெய்த்து விடுகிறார். மீனா கைதட்ட எடுத்து அப்படியே அமைதியாகிறார். அதன் பிறகு கணவன் மனைவி என இரண்டு பேர் விளையாடும் போட்டி வைக்கப்படுகிறது. பதில் கணவனின் ஒரு காலையும் மனைவியின் ஒரு காலையும் கட்டிவிட்டு யார் முதலில் வருகிறார்கள் என்று பார்க்கலாம் என்று போட்டு வைக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் பேசாததால் சரியாக நடந்து வர வில்லை. ரோகினி இடம் மனோஜ் ஒரு கேம் கூட ஜெயிக்கவில்லை ஒழுங்கா வா என்று கூப்பிட நீ சாரி கேளு என்று சொல்லுகிறார் நீ யார் யாருக்கோ வீட்டு வாடகை கொடுப்ப நான் கேட்கக்கூடாதா நீ பண்ணது தப்பு மன்னிப்பு கேளு என்று மனோஜ் சொல்ல ரோகினி நான் இருக்க மாட்டேன் எந்த தப்பும் பண்ணல என்று சொல்லி சரியாக விளையாடாமல் இருக்கிறார்.

மறுபக்கம் ஸ்ருதி மற்றும் ரவியும் இதே போல் பேசிக்கொண்டிருக்க மீனா முத்துவிடம் கொஞ்சம் ஸ்லோவா போலாம் இவ்ளோ பாஸ்டா இதுக்கு போறீங்க என்று சொல்ல அப்பதான் சீக்கிரம் போக முடியும் என்று முத்து சொல்லுகிறார். எதுக்கு குடிக்கிறதுக்கா என்று சொல்ல நீ என் பிரண்டுகளை பத்தி தப்பா பேசினா இல்ல மறந்து அதுக்கு மன்னிப்பு கேளு என்று முத்து சொல்ல அதெல்லாம் முடியாது என்று மீனா சொல்லுகிறார். இந்தப் போட்டியிலும் இவர்கள் மூவரும் தோற்றுவிட முத்துவின் நண்பன் செல்வம் மற்றும் அவரது மனைவி ஜெயித்து விடுகின்றனர்.

அடுத்ததாக பானை உடைக்கும் போட்டி வைக்கப்படுகிறது கணவன்களின் கண்களை கட்டிவிட்டு மனைவியும் வழிநடத்த வேண்டும். என்று சொல்ல இவர்கள் மூவரும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கின்றனர். முத்து மீனா விடம் வழி கேட்க அவர் எதுவும் சொல்லாததால் அப்படியே நடந்து வந்து கொஞ்ச தூரத்தில் கண்களை அவிழ்த்து விடுகிறார். மனோஜ் எதுவும் சொல்லாததால் நானே அடிக்கிறேன் என்று கிட்ட வந்த பின்னாடி திரும்பி ரோகினியின் மண்டையில் அடித்து விடுகிறார். ஸ்ருதி ரவிக்கு தப்பாக வழிகாட்டி பந்தலின் அடிக்க வைக்க ரவி டென்ஷன் ஆகிறார்.

அடுத்ததாக கடைசியாக ரொமான்டிக் போட்டி என்று ஒன்று நடத்த படுகிறது அதில் ஆண்கள் மனைவியை தூக்கிக் கொண்டு ஒற்றை காலில் ஐந்து நிமிடம் நிற்க வேண்டும் என்று சொல்ல அண்ணாமலை இதுலையும் தோத்திருவாங்கலாமா என்று சொல்ல இதில் கண்டிப்பாக ஜெயிப்பாங்க பார் என்று சொல்லுகிறார். விளையாட்டுக்கு தயாரான ஜோடிகள் நிற்க கணவர்கள் தூக்கிக்கொண்டு ஒற்றை காலில் நிற்கின்றனர். முத்து மீனாவை பார்த்து நாளிலிருந்து கொஞ்சம் வாக்கிங் போ என்று சொல்கிறார் அப்போ நான் குண்டா இருக்கேன்னா என்று கேட்க அப்படி சொல்லல கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருந்தா சந்தோஷமா இருக்கும் என்று சொல்ல மீனா சிரிக்கிறார் உடனே முத்து இப்போ எவ்வளவு நேரம் வேணா தூக்கிட்டு நிற்பேன் என்று சொல்லி இருவரும் சமாதானம் ஆகி விடுகின்றனர். மனோஜ்,ரோகினி இருவரும் பேசி சமாதானமாக ரவி ஸ்ருதியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டிருக்க உனக்கு கை வலிச்சா விட்டுடு ரவி என்று சொல்ல அது எப்படி விட முடியும் என்று சொல்லுகிறார். என் மேல அவ்வளவு லவ்வா என்று சொல்ல தெரியாதா என்று ரவி கேட்க அவர்களும் சமாதானம் ஆகின்றது கடைசி எண் மூவரும் இந்தப் போட்டியில் ஜெயிக்க பரிசுகளும் ஆகிக்கொள்கின்றன.

பிறகு வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருக்க முதல்ல நீங்க ஜெயிக்காததுக்கு என்ன காரணம்னு எனக்கு புரியுது என்று பாட்டி சொல்லுகிறார். புருஷன் பொண்டாட்டி ஒத்துமையா இருந்தாதான் ஜெயிக்க முடியும் எந்த பிரச்சனையா இருந்தாலும் விட்டுக் கொடுத்துட்டு போகணும் என்று பேசிக் கொண்டிருக்க இருவர் மரத்தில் செய்யப்பட்ட தொட்டிலை வீட்டிற்கு கொண்டு வருகின்றனர் முத்து நாங்க எதுவும் வாங்கவில்லை என்று சொல்ல பாட்டி நான்தான் எடுத்துட்டு வர சொன்னேன் என்று சொல்ல, அதனை வீட்டுக்குள் கொண்டு வந்து வைக்கின்றனர். இந்தத் தொட்டில சீக்கிரமா என்னோட கொள்ளு பேரனையோ கொழுப்பேத்தியோ பாக்கணும் அது உங்க கையில தான் இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க உடனே சுருதி எனக்கு ஓகே தான் நான் ரவி தான் நான் சொல்றேன் என்று சொல்ல என்னடா சொல்ற என்று பாட்டி கேட்கிறார் அதற்கு உடனே சுத்தி வாடகத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகும் விஷயத்தை சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எதுக்கு இந்த முடிவு என்று கேட்க பிரசவ வலி வரும் போது அதிகமா இருக்கு அதன் அடிக்கிறவங்க பண்ணும் போதே என்னால தாங்க முடியல ரியலா அனுபவிக்க முடியாது என்று பேச விஜய்யா யார கேட்டு இந்த முடிவு எடுத்தீங்க என்று கேட்கிறார். நாங்க ரெண்டு பேர் குழந்தை பெத்துக்கிறது யார்கிட்ட கேட்கணும் என்று ஸ்ருதி பேசிவிட்டு நாங்க எதுவா இருந்தாலும் அப்புறம் சொல்றோம் என சொல்லி அங்கிருந்து வேலைக்கு கிளம்ப ரவியை விட்டுட்டு வர சொல்லுகிறார். ரவியும் கிளம்ப பாட்டி ரவியை நிற்க வைத்து எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணுங்க என்று சொல்லுகிறார். அவர்கள் சென்றவுடன் மீனா, ரோகிணியை கூப்பிட்டு இந்த தொட்டில்ல குழந்தை சத்தம் கேக்கணும் என்று சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்புகிறார்.

மறுபக்கம் மீனா கல்யாண டெக்கரேஷன் வேலையை பரபரப்பாக செய்து கொண்டு இருக்கிறார். கார் டெக்கரேஷன் செய்து கொண்டிருக்க சிந்தாமணி ஆட்களை வைத்து மீனாவின் வேலையை கெடுத்து விட பிளான் போடுகிறார். முதலில் அவர்கள் வந்து வம்பு இழுத்து அனைத்தையும் கலைத்துவிட்டு மீனா அழுவது போல் காண்பிக்க அது சிந்தாமணியின் கனவு என்று தெரிகிறது. கனவு நல்லாதான் இருக்கு இதே மாதிரி நிஜத்துல நடக்கணும் போங்கடா என்று சொல்ல அவர்கள் அதேபோல் வந்து வம்பு இழுத்து பேச சிந்தாமணி நின்றிருப்பதை மீனா பார்த்து விடுகிறார். உடனே டெக்கரேஷன்களை கலைக்க போக மீனாவும் அவரது ஆட்களும் அந்த இருவரையும் கட்டை மற்றும் தொடப்பத்தில் அடித்து விரட்டுகின்றனர். இதனால் சிந்தாமணி அதிர்ச்சி அடைகிறார்.

இது மட்டும் இல்லாமல் மீனாவின் டெக்கரேஷனை பார்த்த சீரியல் நடிகர் சூப்பரா இருக்குமா என்று பாராட்டி 2000 எக்ஸ்ட்ரா கொடுக்க சொல்லுகிறார் பிறகு உள்ளே வந்தவுடன் சிந்தாமணி டெக்கரேஷனை பார்த்து எனக்கும் 2000 எக்ஸ்ட்ரா கொடுக்கப் போறீங்களா? என்று சொல்ல நீங்க பண்ணது ஏதோ பண்ணி இருக்கீங்க என்ன டிஃபரண்டா பண்ணிருக்கீங்க இதே மாதிரி பத்து வாட்டி பண்ணிட்டீங்க ன்னு சொன்னாங்க அதனால உங்களுக்கு அதுல இருந்து 2000 கம்மி என்று சொல்லிவிட்டு சென்றுவிட சிந்தாமணி மீனாவிடம் வந்து நின்ற முறைக்கிறார். பிறகு செல்ல போக மீனா அவரை நிற்க வைத்து புருஷன் சொன்ன மாதிரி நாங்க ஸ்ட்ராங்கா வளந்து காட்டுவோம் வாழு வாழ விடு என்று சொல்லிவிட்டு போக சொல்லுகிறார்.

ரோகினியும் மனோஜும் கோயிலுக்கு வர அங்கு என்ன நடக்கிறது? போலீஸ் என்ன கேட்கின்றனர்? அதற்கு மனோஜ் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 20-01-25
siragadikka asai serial today episode update 20-01-25