மீனா ஆர்டரை பறித்த சிந்தாமணி, சந்தோஷத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனாவுக்கு வந்த ஆர்டரை கைப்பற்றியுள்ளார் சிந்தாமணி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஆர்டரை வாங்க மண்டபத்திற்கு வருகிறார்.ஆனால் மண்டபத்தில் இருக்கும் ஓனர் டெக்கரேஷனை செய்ய நாங்களே ரெடி பண்ணிடுவோம் ஆளுங்க அவங்க தான் செய்வாங்க என்று சொல்ல ஆனால் வந்த நபர்கள் எங்களுக்கு இந்த பொண்ணு தான் செய்யணும் இந்த பொண்ணு பண்ண டெக்கரேஷன் எங்களுக்கு புடிச்சிருக்கு டெகரேஷன் பண்றது எங்களோட விருப்பம் தானே அதையே நீங்க சொல்லணும் என்று கேட்க அந்த நேரம் பார்த்து சிந்தாமணி வருகிறார். அவர் வந்து இவங்க தான் இந்த மண்டபத்துக்கு தொடர்ந்து ஆர்டர் எடுக்குறாங்க இவங்கதான் பண்ணுவாங்க என்று சொல்ல உடனே அவர்கள் மீனாதான் பண்ண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். உடனே சிந்தாமணி நான் ஒரு கொட்டேஷன் போட்டு தரேன் அந்தப் பொண்ணு ஒரு கொட்டேஷன் போட்டு தரட்டும் உங்களுக்கு எது கம்மியா இருக்கோ நீங்க அவங்ககிட்ட பண்ணிக்கோங்க என்று சொல்ல மீனாவும் அவங்க சொல்றதும் சரிதான் என்று சொல்லுகிறார். மீனா அவர்களிடம் டெகரேஷன் எப்படி வேண்டும் என்று கேட்க அவர்களும் எல்லாத்தையும் சொல்ல இனி நான் நோட் பண்ணி எவ்வளவு ஆகும் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சிந்தாமணி உட்கார்ந்த இடத்திலிருந்து எழுதி முடித்துவிட்டு சீட்டை தனியாக வைக்கிறார். மீனா கணக்கை முடித்துவிட்டு நான் உங்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் முடிச்சு கொடுக்கிறேன் என்று சொல்ல ரேட் அதிகமா இருக்குமா என்று அவர்கள் சொல்லுகின்றனர் இதுவே கம்மிதான் நான் உங்களுக்கு போட்டு இருக்கேன் என்னோட வேலையை சேர்க்கவே இல்ல ஆளுங்களோட வேலையும் பூவோட ரேட்டையோ விசாரிச்சு தான் நான் உங்களுக்கு கொடுத்து இருக்கேன் என்று சொல்ல இருந்தாலும் அதிகமா இருக்கு என்று சொல்லி சிந்தாமணியின் பேப்பரை எடுத்துப் பார்க்க அதில் அந்த பொண்ணு குடுக்குற வேலையை விட பாதி கம்மியாக பண்ணி தரேன் என்று சொல்லி 60,000 பண்ணி கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார் அவர்கள் உடனே சிந்தாமணிக்கு ஆர்டரை கொடுத்து விடுகின்றனர்.
மீனா அங்கிருந்து கிளம்ப சிந்தாமணி உடன் இருக்கும் நபர் நீயா இருந்தா ரெண்டு லட்சம் வாங்கி இருப்பேன் இவ்ளோ கம்மியா ஏன் வாங்குன கா நம்மளுக்கு கட்டுபடி ஆகாது என்று சொல்ல நான் ஏன் கம்மி பண்ண போறேன் கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடி மழை வந்துருச்சு பூ ஸ்டாக் இல்ல ரேட் அதிகம் என்று சொல்லி ஒன்றை லட்சமாவது வாங்கிடுவேன் என்று சொல்லி திட்டம் போடுகிறார். மீனா வெளியே வந்த போது மண்டபத்தில் வேலை செய்திருக்கும் பெண் சிந்தாமணி ஒரு மோசமான பெண் என்றும் அவரிடம் உஷாரா இருந்துக்கோமா என்றும் சொல்லுகிறார்.
மறுபக்கம் விஜயா கட்டிலின் மேல் புடவையை குவித்து விட்டு எந்த புடவை கட்டுவது என்று தெரியாமல் குழம்பு இருக்கிறார். அண்ணாமலை இடம் நீங்களாவது எந்த புடவனு சொல்லுங்க என்று சொன்னாள் நீ என்ன ரெண்டு புடவையா காட்டிட்டு காமிக்கிற இவ்வளவு புடவை கொட்டி வச்சிருக்க உன் இஷ்டம் என்று சொல்ல என் பையன் பீச் ஹவுஸ் வாங்கி இருக்கா அங்க ரெண்டு நாளைக்கு தங்கணும் அங்க எந்த மாதிரியான புடவை கட்டினா நல்லா இருக்கும் என்று யோசித்து தான் பண்ணனும் உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க ரோகினி கிட்ட கேட்டு இருக்கலாம் என்று சொல்லுகிறார். உடனே விஜயா ரோகினி இன்று உனக்கு சென்று ரோகிணியை அழைத்து வருகிறார்.
ரோகினி புடவையை சூஸ் பண்ணி கொடுக்க விஜயா சந்தோஷப்படுகிறார். பிறகு என்ன நடக்கிறது? ஸ்ருதி ரவி என்ன பேசிக் கொள்கிறார்கள்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.