அழகா வாழ்த்து சொல்லி ஆனந்தியை கவர்ந்துள்ளார் அன்பு.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அப்பா ஆனந்தி இடம் நீ மெட்ராஸ்ல வேலை செஞ்சு கஷ்டப்படுறது உன் ஆத்தாளுக்கும் கோகிலாவுக்கு தெரியாது நீ சொல்லிடாத என்று கண் கலங்கி அழுகிறார்.

அதன் பிறகு ஆனந்தியின் பிறந்த நாளுக்கு மகேஷை முந்திக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார் அன்பு. அதுவும் இந்த அழகான தேவதைக்கு அன்புவோட பிறந்தநாள் வாழ்த்து என்று சொல்லி ஸ்கோர் செய்கிறார்.

அன்பு பேசி முடித்ததும் மகேஷ் போன் செய்து வாழ்த்து சொல்ல ஆனந்தி நீங்கதான் எனக்கு இரண்டாவது வாழ்த்து சொல்லி இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ் சார் என்று சொல்ல அப்போ முதலாவது வாழ்த்து சொன்னது யாரு என்று மகேஷ் கேள்வி எழுப்புகிறார். ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.