மீனா கொலு வைக்க முடிவெடுக்க விஜயா சம்மதிப்பாரா என்று பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா பூக்கடையில் பூ கட்டிக்கொண்டு இருக்கிறார் நீ போ சீதா நான் பாத்துக்குறேன் என்று அவர்கள் நம்ம சொல்ல, நான் போய் கம்ப்யூட்டர் முன்னாடி உட்காரதான் போறேன் ஆனா நீ இன்னைக்கெல்லாம் நின்னுகிட்டு இருப்பேன் நான் கட்டி வச்சுட்டே போறேன்னு சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நண்பருடன் சத்தியா வருகிறார். காலேஜுக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்ப இப்போ கால் வலி எப்படி இருக்கு என்று கேட்கிறார். உடனே மீனாவின் அம்மா அதெல்லாம் எனக்கு நல்லா இருக்கு நீ இதே மாதிரி இருக்கணும் இதுதான் எனக்கு சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கே மீனா வருகிறார். காலேஜ்க்கு போயிட்டு வரேன் என்று சொல்லி கிளம்ப மீனா செலவுக்கு பணத்தை கொடுக்க சத்தியா வாங்க மறுக்கிறார் பிறகு வலுக்கட்டாயமாக சட்டை பையில் வைத்து விடுகிறார் மீனா.
மேலும் கோவிலில் ஒருவர் இந்த வருடம் என்னால் கொலு வைக்க முடியாது என்பதால் அதற்கான பிரசாதம் செய்ய செய்ய ஆள் தேவைப்படுவதால் பூசாரியிடம் சொல்ல அவர் மீனாவை கூப்பிட்டு சொல்லுகிறார். மீனாவின் அம்மா சந்திரா செய்ய ஒப்புக்கொள்ள அட்வான்ஸ் பணத்தை அந்த பெண்மணி கொடுக்கிறார். மீனா விடம் கொலு வைக்கிறீங்களா என்று கேட்க பழக்கம் இல்லமா என்று சொல்லுகிறார் கல்யாணம் ஆகாத உங்களுக்கு கல்யாணம் ஆகும் குழந்தை இல்லைன்னு நினைச்சா குழந்தை பிறக்கும் அதை நினைச்சுகிட்டு நீ கொலு வை சொல்லுகிறார் நான் வீட்டில கேட்டுட்டு சொல்றேன் மா என்று மீனா யோசிக்க மீனாவின் அம்மாவும் நல்ல விஷயம்தான் என்று சொல்லுகிறார். என் மாமியார் சம்மதிக்கணும்ல என்று சொல்ல அதுவும் சரிதான் நானே முதல்ல என்னோட வீட்டுக்காரர் கிட்ட கேட்டுட்டு சொல்றேன் என்று சொல்லி விடுகிறார்.
ஸ்ருதியின் அம்மா ஸ்ருதியை வந்து டப்பிங் ஸ்டுடியோவில் நேரில் சந்தித்து பேசுகிறார். ரவியை சந்தித்த விஷயத்தை பற்றி பேசி உஷாரா இரு மாப்பிள்ளையை உன் கண்ட்ரோல்ல வச்சுக்கோ என்றெல்லாம் பேச ரவியை பத்தி எனக்கு தெரியும் இதுக்கு மேல அவனை பத்தி எதுவும் பேசாதே என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் சுருதி.
மீனா சமைத்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து கட்டிப்பிடிக்க வர மீனா கத்தியுடன் திரும்புகிறார். இதனால் முத்து ஷாக் ஆகி கத்தியை கீழே வாங்கி வைக்கிறார். பிறகு முத்துவிடம் கொலு வைக்கப் போகும் விஷயத்தை சொல்ல முத்து சம்மதிக்கிறார். இது அத்தை கிட்ட சொல்லிடுங்க கொஞ்சம், சொல்ல ஆமா நான் சொன்ன உடனே சம்மதித்து விடுவார்கள் பாரு நான் சொன்னதுனாலே அவங்க ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்லுகிறார். பிறகு சுருதி வைத்து சொல்லலாம் என்று சொல்ல சுருதி சொன்னா என்னால எப்படி பூஜை பண்ண முடியும் என்று யோசிக்கின்றனர். உடனே முத்து இந்த வீட்டு தலைவர் கிட்ட கேற்றலாம் அப்பா கிட்ட கேட்கலாம் என முடிவு எடுக்கிறார். அந்த நேரம் பார்த்து அண்ணாமலை உள்ளே வருகிறார்.
கொலு வைக்கும் விஷயத்தை அண்ணாமலை இடம் சொல்லி விஜயாவிடம் பர்மிஷன் வாங்கி கொடுக்க சொல்லுகின்றன. முத்துவிடம் உனக்கு தெரியாததா உங்க அம்மா என் பேச்சையா கேப்பா என்று அண்ணாமலை சொல்லுகிறார். சரி நான் போய் கேட்கிறேன் என்று எழுந்து வர விஜயா வெளியே வருகிறார் அதே நேரத்தில் ரோகினியும் உள்ளே வருகிறார். விஜயாவிடம் கொலு வைப்பதைக் பற்றி பேச, கொலு வச்சு அவங்க ரெண்டு பேரும் ஏறி உட்கார்ந்து இருப்பாங்களா என்று நக்கல் அடிக்க உடனே முத்து அப்பா சொன்னா ஒக்காந்துருவோம் என்று சொல்லுகிறார். உடனே ரோகினி நம்ம வீட்டுல கொலு வைக்கிற பழக்கம் இருக்கா என்று கேட்க, அதெல்லாம் இல்லம்மா இவங்க தான் புதுசு புதுசா பழக்கம் பண்றாங்க என்று சொல்லுகிறார்.
விதவிதமா சுண்டல் செஞ்சு சாப்பிடணுமா என்று மீனாவிடம் கேட்க அதற்கு முத்து சுண்டல் வேணும்னா நாங்க பீச்சுல போய் சாப்பிட்டு போ என்று பதில் கொடுக்கிறார். இது மட்டும் இல்லாமல் கொலு வைக்கனும்னா நிறைய செலவாகும் நிறைய பலகாரம் எல்லாம் செய்யணும் என்று விஜயா சொல்ல எல்லாமே நான் பார்த்துக்கிறேன் அத்தை என்று மீனா சொல்லுகிறார். அதற்கு அண்ணாமலையும் நம்ம வீட்டிலேயே நல்ல விஷயம் நடக்கணும்னு ஆசைப்படறேன் இல்ல அப்போ பண்ணிடலாம் என்று சொல்ல விஜயா யோசிக்கிறார். பிறகு அதற்கு டெய்லியும் பூஜை பண்ணனும், பாட்டு எல்லாம் பாடணும் என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை நீதான் சூப்பரா பாடுவியே என்று சொல்லுகிறார்.
விஜயா இதற்கு சம்மதித்தாரா? அண்ணாமலையிடம் என்ன சொன்னார்? என்ன நடக்கப் போகிறது? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.