தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லியிடம் சூர்யா இந்த கல்யாணத்தை நிறுத்திடுவீங்க இல்லனா அசிங்கப்படுவீங்க என்று சொல்லியும் இந்த கல்யாணத்தை நடத்த என்கிட்ட ஒரு பிளான் இருக்கு சூர்யா அர்ச்சனா கழுத்தில் தாலி கட்டுவான் என்று உறுதியாக சொல்லுகிறார். சூர்யா நண்பனுடன் சேர்ந்து குடித்துக்கொண்டே நடந்த விஷயங்களை சொல்லுகிறார். இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதாவது ஐடியா சொல்லு என்று கேட்கிறார். கல்யாண என்றால் புடிச்ச பொண்ணா கூட வாழனும், கல்யாணம்னு டார்ச்சர் பண்ண கூடாது என்று கோபப்படுகிறார். அவங்க சொன்னா நான் விட்ருவேனா என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மினிஸ்டரின் போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அதனைப் பார்த்து சூர்யா உடனே கல்யாணத்தை நிறுத்த ஐடியா கிடைத்துவிட்டது என்று காரில் ஏறி கிளம்புகின்றனர்.
மினிஸ்டர் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்க, அங்கு இருப்பவர்கள் மினிஸ்டரின் குடும்பத்தை பாராட்டி பேச சரக்கு பாட்டிலுடன் சூர்யா மற்றும் அவரது நண்பர் இருவரும் என்ட்ரி கொடுக்கிறார்கள். அங்கு இருப்பவர்களிடம் 24 மணி நேரமும் குடிப்பவருக்கு உங்களோட பொண்ண கொடுப்பீங்களா? ஆனா உங்க தலைவர் கொடுக்கிறார் என்று சொல்லுகிறார் சூர்யா.
உடனே மினிஸ்டர் நீங்க ஒரு குடிமகன் உங்களுக்கு யாராவது பொண்ணு தருவாங்களா? தர மாட்டாங்க அதனால என்னோட பொண்ணு உங்களுக்கு கொடுத்து உங்க வாழ்க்கைய நான் காப்பாத்துறேன் என்று சொல்ல அனைவரும் கைத்தட்டுகின்றனர். மேலும் எனக்கு உங்க பொண்ண கல்யாணம் பண்ணி வச்சா அவங்க பொண்ணோட லைஃப் போயிடுவோம் என்று எவ்வளவு சொல்லியும் மினிஸ்டர் என்னோட மாப்பிள்ளை நீங்கதான் என்று உறுதியாக இருக்கிறார். சூர்யா பணத்துக்காக எங்க அம்மா சுந்தரவள்ளிய நீங்க சம்பந்தி ஆக்கணும் என்று சொல்லுறீங்க என்று சொல்ல நீங்க குடிக்கிற சரக்கு காஸ்ட்லி தான அதோட காஸ்ட்லியான உங்களுக்கு சரக்கு வாங்கி தரேன் குடிச்சுட்டு ஓரமா உட்காருங்க என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாமல் என் வீட்டில் ஒரு ரூம் செட்டப்ல தனியா பார் இருக்கு நீங்க இது மாதிரி வெளியே குடிக்கிறதுக்கு வீட்டுக்குள்ளேயே குடிங்க மாப்பிள்ளை என்று சொல்லுகிறார். சூர்யா இதையெல்லாம் கேட்டு இது வேலைக்காகாது என்று வெளியே வந்து விடுகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி இடம் அருணாச்சலம் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு வந்து நான் என்ன சொன்னாலும் நீ கேக்க போறதில்ல அதனால நான் எதையும் தடுக்க போறது இல்ல என்று சொல்லிவிட்டு கல்யாண பத்திரிக்கையை குலதெய்வ கோவிலில் வைக்க வேண்டும் முதலில் அங்கு வைத்து பூஜை பண்ண பிறகு தான் எல்லாருக்கும் கொடுக்கணும் நான் போய் போயிட்டு வந்துடறேன் என்று பத்திரிக்கையுடன் கிளம்புகிறார் சரி நீங்க போயிட்டு வாங்க நான் பாத்துக்குறேன் என்று சுந்தரவல்லி சொல்லி அனுப்பி வைக்கிறார்.
உடனே மாதவி மற்றும் அவரது கணவர் ,சுரேகா எனும் மூவரும் வந்து சுந்தரவல்லி இடம் பதற்றமாக நீங்க பார்த்திருக்கிற மருமகள் விளக்கேற்ற மாட்டார் நம்ம குடும்ப மானத்தை கப்பலேத்துவா போல இருக்கு என்று ஒரு வீடியோவை காட்டுகின்றனர். அந்த வீடியோவில் அர்ச்சனா பாரில் சரக்கடித்துக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து சுந்தரவல்லி டென்ஷன் ஆகாமல் இப்ப இதுக்கு என்ன ஆகும் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் பொண்ணு அதுவும் ஒரே பொண்ணு சென்னையில இருக்கா வெளிநாட்டில் படிச்சிட்டு வந்து இருக்கா இதெல்லாம் இருக்குதா செய்வோம் அதுவும் இல்லாம அவளை அவங்க வீட்ல செல்லமா வளர்த்திருக்காங்க அவ கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுக்கு வரட்டும் அவளை நான் மாத்திடுவேன் என்று ஈசியாக சொல்லிவிட்டு கிளம்புகிறார் சுந்தரவல்லி.
உடனே மாதவி இந்த பிளானும் சொதப்பிடிச்சு இதுக்கு மேல எந்த பிரயோஜனமும் இல்ல என் தம்பி சூர்யா கிட்ட ஒப்படைத்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுக்கிறார் மாதவி. அருணாச்சலம் குலதெய்வ கோவிலில் பத்திரிக்கையை வைத்து பூஜை செய்துவிட்டு பங்காளிகள் வீட்டிற்கு நந்தினி மற்றும் அவரது தந்தையுடன் நேரில் சென்று பத்திரிக்கை வைக்கிறார்.
அடுத்ததாக சுதாகர் வீட்டிற்கு பத்திரிக்கை எடுத்துக்கொண்டு அருணாச்சலம் செல்ல வெளியில் இருந்து வரவேற்கிறார். பிறகு நந்தினியின் அப்பாவை கூப்பிட பத்திரிக்கை வைக்கிறதுக்கு உங்க வீட்ல இருந்து ஆள கூட்டிட்டு வரணும் நீங்க என்ன தோட்டக்காரி குடும்பத்தை கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று நாட்களாக பேசுகிறார். இது மட்டும் இல்லாமல் யார் யாரை எந்தெந்த இடத்தில் வைக்கணுமோ அங்க வைக்கணும் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் மாதவி தாலி கற்ற வரைக்கும் டைம் இருக்கு கல்யாணத்தை நிறுத்தி காட்டுற பாரு என்று கோபமாக பேசுகிறார். அருணாச்சலம் நந்தினியிடம் குடும்பத்துடன் கல்யாணத்திற்கு இரண்டு மூன்று நாள் முன்னாடியே வந்துருங்க என்று கூப்பிடுகிறார்.
மறுபக்கம் சூர்யா அர்ச்சனா தான் என் பொண்டாட்டி உன் கழுத்துல தான் தாலி கட்டுவேன் என்று சொல்ல மாதவி அதிர்ச்சியாக சுந்தரவல்லி சிரிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.