கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிள் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியாக உள்ள படம் கங்குவா.
சிறுத்தை சிவா இயக்கத்திலும், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். மேலும் திஷா பதானி ,பாபி தியோல், நட்டி நட்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் வேட்டையன் படமும் அதே தேதியில் வெளியாவதால் கங்குவா படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றியது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இந்த படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவலை பட குழு வெளியிட்டு இருந்தது.
மேலும் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் அக்டோபர் இரண்டாம் தேதியும் இசை வெளியீட்டு விழா 20ஆம் தேதியும் நடக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.