குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அமலாபால் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மைனா படத்தின் மூலம் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல் விஜயை திருமணம் செய்து கொண்ட இவர், சில ஆண்டுகளில் விவாகரத்தும் பெற்றார்.
பிறகு தனது நெருங்கிய நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இலை என பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது மகன் இலையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “ஒரு சேர வளர்கிறோம்” என்ற பதிவை வெளியிட்டு உள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.