சூப்பராக இனியா டான்ஸ் ஆடி முடிக்க பழனிச்சாமி பாக்யாவை சந்தித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியாவின் ரெஸ்டாரன்ட்க்கு செஃப் வேலைக்காக கோபி அனுப்பிய நபர் வருகிறார். செல்வி பாக்கியாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்ல மற்ற விஷயங்களைப் பற்றி இருவரும் பேசிக் கொள்கின்றனர். சம்பளம் மற்ற விஷயங்களைப் பற்றி பாக்கியா பேச அவர் அனைத்திற்கும் சம்மதித்து விடுகிறார். நாளைக்கு வேலைக்கு வரசொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் இனியா டான்ஸ் கம்பெட்டிஷன் நினைத்து பயப்பட்டு நான் வேணா விலகிடவா என்று கேட்க நம்ம விழுந்த பழியை நம்ம தீக்குறதுக்கு ஒரு நல்ல சான்ஸ் என்று நண்பர்கள் சொல்ல அதை நான் படிச்சு நல்லா செமஸ்டர் மார்க் வாங்கி எடுத்துக்கிறேன் என்று இனியா சொல்லுகிறார் எனக்கு பயத்தில் எல்லாமே மறந்திடும் போல இருக்கு என்று பயப்படுகிறார். நான் வெளியே போயிடுறேன் என்ற கிளம்ப எதிரில் ஜட்ஜஸ் வர வெளியே போக முடியாமல் நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொருவராக வந்து அவர்களின் நடனத் திறமையை வெளிப்படுத்த இறுதியாக இனியாவை கூப்பிடுகின்றனர். பயத்துடன் ஸ்டேஜுக்கு போன இனியா ஜட்ஜ் ரெடியா என கேட்க ரெடி என சொல்லிவிட்டு “நன்னாரே” பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். ஆனால் இனியா எந்த ஒரு பயமும் இல்லாமல் டான்ஸ் சூப்பராகஆடி விடுகிறார். நண்பர்கள் எல்லோரும் சூப்பரா டான்ஸ் ஆட்ற என்று பாராட்டுகின்றனர். ஜட்ஜஸ் யார் செலக்ட் ஆயிருக்காங்க என்று அறிவிப்பாங்க என்று சொல்ல ஆனால் அவர்கள் இன்னும் இரண்டு காலேஜில் ஆடிஷன் இருக்கு முடிச்சிட்டு நாளைக்கு அனவுன்ஸ் பண்றோம் என்று சொல்லிவிடுகின்றனர். இதனால் யார் செலக்ட் ஆவாங்க என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன.
ராதிகா, மயூ உடன் செஸ் விளையாடிக் கொண்டிருக்க மயூ நீங்க இரண்டு வாட்டி என்ன ஜெயிச்சுட்டீங்க அந்த வாட்டி நான் ஜெயிக்கணும் என்று யோசித்து விளையாடுகிறார் அந்த நேரம் பார்த்து கோபி உள்ளே வர பாருங்க டாடி அம்மா ரெண்டு வாட்டி ஜெயிச்சுட்டாங்க நான் ஒரு வாட்டி யாவது ஜெயிக்கணும் என்று சொல்ல கோபி உதவி செய்து மயூ ஜெயிக்கிறார். உடனே ராதிகா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன தோற்கடித்துவிட்டீர்கள் என்று கோபப்படுகிறார். ஆனால் கோபி நம்ம குழந்தையோட சந்தோஷம்தானே நம்மளுக்கு முக்கியம் என்று பேசுகிறார். மேலும் ராதிகாவிடம் நம்ம இதே நிறைய சந்தோஷமா இருக்கணும் என்று இருவரும் மகிழ்ச்சியாக பேசுகின்றனர்.
ரெஸ்டாரெண்டுக்கு பழனிச்சாமி ஒரு கேக் கொண்டு வருகிறார். நாங்க எங்களோட பேக்கரில ஒரு புது கேக் ட்ரை பண்ணி இருப்போம் நீங்க டேஸ்ட் பார்த்து சொல்லுங்க என்று கேட்க டேஸ்ட் எல்லாம் நல்லா இருக்கு ஆனா சுகர் மட்டும் கொஞ்சம் அதிகமா இருக்கு என்று சொல்லுகிறார். கரெக்ட் மேடம் இதையேதான் நானும் அங்க சொல்லிட்டு வந்தேன் இதுக்கு தான் கரெக்டான ஒரு ஆள் சொல்லணும்னு சொல்றது என்று சொல்லி பாராட்டுகிறார்.
பாக்யாவும் பழனிச்சாமியும் என்ன பேசிக் கொள்கின்றன? செப் விஷயத்தை பாக்யா பழனிச்சாமிடம் சொல்லுகிறாரா என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.