காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிம்பு படத்தில், சின்ன அனிருத் மியூசிக்
‘சின்ன அனிருத்’ என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் பற்றிக் காண்போம்..
சிம்பு நடிப்பில் எஸ்.டி.ஆர் 49 படம் உருவாக உள்ளது. ராம்குமார் இயக்க, சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில், சிம்பு கல்லூரி மாணவனாக வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஷூட்டிங் தொடங்க உள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க, சின்ன அனிருத் என கொண்டாடப்படும் சாய் அபயங்கர் எஸ்டிஆர்-49 படத்திற்கு இசையமைக்க உள்ளார். இவர், பாடகர்களான திப்பு-ஹரிணி ஜோடியின் மகன் ஆவார்.
இவர் இசையமைத்த சுயாதீன ஆல்பங்களான ‘கச்சி சேரா’ ‘ஆசை கூட’ பாடல்கள் வைரலானது. மேலும், அனிருத்திடம் சில படங்களில் பணியாற்றியுள்ளார் சாய் அபயங்கர். பின்னர், இவரது இசையில் கமிட் ஆன முதல் படம் பென்ஸ் ஆகும். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், சாய் அபயங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அவ்வகையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா-45 படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்ததாக, அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் படத்திற்கும் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, சிம்புவின் 50-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இவர், அனிருத்தை மிஞ்சி, தனித்துவ இசையில் சாதனை படைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.