ரஜினி-கமல் இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிம்பு. இவரது நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரஜினி-கமல் படத்தில் சிம்பு!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

இந்நிலையில் நடிகர் சிம்பு ரஜினி, கமல் இணைந்து நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் ரஜினி மற்றும் கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன “அவள் அப்படித்தான்” என்ற படம் வெளியாகி 44 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இப்படத்தை “பானா காத்தாடி” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய இருக்கிறார்.

ரஜினி-கமல் படத்தில் சிம்பு!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

அதற்காக இப்படத்தின் உரிமையாளர்களிடம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்படத்தின் ரீமேக்கில் ரஜினி,கமல் அவர்களுக்கு பதிலாக நடிகர் சிம்பு மற்றும் பகத் பாசில் நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி-கமல் படத்தில் சிம்பு!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரசிகர்கள் இந்த தகவலால் உற்சாகமடைந்துள்ளனர்.