பக்கா மாஸ் லுக்கில் நடிகர் சிம்பு வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான 10 தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு மாஸான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.