நடிகர் சிம்புவின் 50வது படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Simbu in 50th Movie Details : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்த சிம்புவிற்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இன்று கனமழை பொழியும் மாவட்டங்கள் : ஆய்வு மையம் தகவல்

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் கோகுல் இயக்கத்தில் கொரானா குமாரு என்ற படத்திலும் நடிக்கிறார்.

அவர்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தாரு – மேடையில் Live ஆக பாடிய Sivangi! | Anandham Vilayadum Veedu

இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இது சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில் தற்போது சிம்புவை 50வது படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

தன்னுடைய ஐம்பதாவது படத்தை தானே சிம்பு இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்காக கதை எழுதும் வேலையில் அவர் விருவிருப்பாக இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது சிம்பு ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ‌‌