உங்கள் மனைவிக்கு எப்படி இரண்டாவது குழந்தை பிறந்தது என ரசிகர்கள் சிலர் கேட்க அதற்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் சாண்டி மனைவி சில்வியா.

Silviya Sandy Reply to Haters : தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான காஜல் பசுபதியுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்து இவர் அவரைப் பிரிந்த பிறகு சில்வியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே இவர்களுக்கு லாலா என்ற மகள் உள்ளார். இதனையடுத்து சமீபத்தில்தான் சில்வியா இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். இதனையடுத்து சிரத்தையுடன் சிலர் சமூக வலைதளங்களில் உங்கள் மனைவிக்கு எப்படி குழந்தை பிறந்தது? சுகப் பிரசவமா அல்லது ஆபரேஷனா என கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

சிறந்த வீரராக ஷகிப் அல் ஹசன் தேர்வு : ஐசிசி அறிவிப்பு

இதனால் கடுப்பான சில்வியா எப்படி குழந்தை பிறந்தால் என்ன? குழந்தைக்கு எது நல்லது என்பது தாய்க்கும் மருத்துவருக்கும் தெரியும். அதைப்பற்றி தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

BIGG BOSS 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் – வெளியான FULL LIST.! | Latest Update | Tamil News | Viral