கணவன்-மனைவியாக சரத்குமார்-தேவயானி நடித்த படம் ரிலீஸ்; படக்குழு நம்பிக்கை..

தமிழ் சினிமாவில் ரவடியிசம், கேங்ஸ்டரிசம் இவையெல்லாம் கலந்த காதலிசம் என செம மசாலா படங்கள் தாறுமாறாய் வரிந்து கட்டுகின்றன. இச்சூழலில், குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற ஃபீல் குட் மூவிகளும் வரவேற்பு பெறுகின்றன. அவ்வகையில் ஒரு படம் எதிர்பார்ப்போம்..

படத்தின் பெயர் 3BHK. ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தார்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், தேவயானி முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

3BHK படம் ஒரு மிடில் கிளாஸ் பேமிலியை பற்றியது. அவர்களின் சொந்த வீட்டு கனவு நனவானதா? என்பதைப் பற்றிய உணர்வுப்பூர்வமான திரைக்கதையாக உருவாக்கப்பட்டு உள்ளது.

படத்தில் சரத்குமாரும், தேவயானியும் கணவன்-மனைவியாக நடித்துள்ளனர். ‘சூரியவம்சம்’ படத்துக்கு பின் இருவரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் மகனாக சித்தார்த் நடித்திருக்கிறார். இந்நிலையில், 3BHK படத்தின் ரிலீஸ் தேதியாக ஜூலை 4-ந்தேதி என படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் கவனம் ஈர்த்த நிலையில், 3BHK படமும் எதிர்பார்க்கப்படுகிறது. பார்ப்போம், இவர்கள் குடும்பக்கதை எப்டின்னு.!

siddharth starrer 3bhk to release on 4th july official date
siddharth starrer 3bhk to release on 4th july official date