Thala Ajith
தல அஜித்திற்குள்ளவும் ஒரு குழந்தை தனம் உள்ளது என ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதுவரை தல அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத வீசியத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது நேர்கொண்ட பார்வை செட்டில் எங்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தது.

அப்போது நான் அஜித் சாரிடம் சென்று நீங்க என்ன சார் பண்ணுவீங்க என கேட்டதற்கு அம்மாவை பார்க்க செல்வேன்.

அவர்களது மடியில் படுத்து உறங்க வேண்டும் என புன்னகையுடன் கூறியதாக பேசியுள்ளார். மேலும் எல்லோரும் சொல்வதை போலவே அஜித் சிறந்த மனிதர். அவரை போல ஒருவரை பார்ப்பது அரிதான ஒன்று என கூறியுள்ளார்.

அப்போது தான் தெரிந்து கொண்டேன் அவருக்குள்ளவும் ஒரு குழந்தை தனம் உள்ளது என்று என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.