Shocking Details of Cook With Comali3

கொக்கு வித் கோமாளி 3-ல் பழைய கோமாளிகள் சிலர் பங்கேற்க மாட்டார்கள் என வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Shocking Details of Cook With Comali3 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சி காமெடியோடு கலந்து கொடுத்ததால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் வெற்றியையும் பெற்றது.

இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை நிறைவு செய்துள்ளது. போட்டியாளராக பங்கேற்றவர்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். கோமாளிகளாக பங்கேற்ற சிவாங்கி, புகழ் உள்ளிட்டோர்களுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

தமிழகத்தில், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு : முழு விவரம்

இதன் காரணமாக விரைவில் தொடங்கப்பட உள்ள குக்கு வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் தொடர்ந்து அனைத்து எபிசோடுகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. அவரது சிலை எபிசோடுகளில் மட்டுமே இவர்களை பார்க்க முடியும் என தகவல் கிடைத்துள்ளது.

Public-க்குனு கூட பார்க்கமாட்டேன் Hussain.., கடுப்பான Manimegalai | VelavanStores | TNagar | Chennai

இதனால் கொக்கு வித் கோமாளி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் இல்லாமல் அந்த நிகழ்ச்சி எதற்கு என்று கூட கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் இதுவரை கோமாளியாக பங்கேற்று வந்த மணிமேகலை அடுத்த சீசனில் ரக்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.