Senior National Hockey
Senior National Hockey

Senior National Hockey – தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டி – அரையிறுதியில் நுழைந்த தமிழக அணி!

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியின் அரையிறுதி சுற்றில் தமிழகம்-சாய் அணிகள் மோதுகின்றன. சீனியர் தேசிய ஹாக்கி போட்டியில் மொத்தம் 41 அணிகள் பங்கேற்றன.

இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடந்த போட்டிகளின் முடிவில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

எழும்பூர் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் “எச்” பிரிவில் முதலிடம் பிடித்த சாய் அணியும், “ஏ” பிரிவில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரா அணியும் மோதின.

இதில் 2-0 என்ற கோல் கணக்கில் சாய் அணி வென்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் “ஜி” பிரிவில் முதலிடம் பிடித்த தமிழக அணியும், “பி” பிரிவில் முதலிடம் பிடித்த சசாஷ்த்ர சீமா பால் அணியும் மோதின. இந்த ஆட்டதில் துவக்கத்தில் இருந்தே இரு அணிகளுக்கும் கடுமையாக போராடின.

அதன்பிறகு 5-வது நிமிடத்தில் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பில் தமிழக அணி வீரர் ராயர் ஒரு பீல்டு கோல் அடித்து கணக்கை துவங்கினார்.

அதன் பிறகு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் முத்து செல்வன் கோல் அடித்தார்.

முதல் பாதி நிறைவில் 2-0 என கோல் கணக்கில் சாய் அணி வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது.