கேப்ரில்லா, ஆஜித்தை தொடர்ந்து மற்றொரு பிக்பாஸ் பிரபலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sendrayan Tested Positive for Covid19 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடி. இது நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்களில் இருந்ததும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்து கொரானாவால் பாதிக்கப்படும் விஜய் டிவி பிரபலங்கள்.. கேபி, ஆஜித்தை தொடர்ந்து மற்றொரு பிக்பாஸ் பிரபலத்திற்கு கொரானா உறுதி.!!

ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவரான கேப்ரில்லாவுக்கு கொரானா வைரஸ் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்றொரு பிக்பாஸ் பிரபலமான ஆஜித்துக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரை தொடர்ந்து நடிகர் சென்ராயன் தனக்கு கொரானா பாசிட்டிவ் என வந்திருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மூன்று போட்டியாளர்களுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.