171வது படத்தில் நாயகனாக நடிக்கும் சரத்குமார்

Web Ads

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 171வது திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் தயாரிக்கும் இந்தப் படத்தில், பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளது. இந்த புதிய கூட்டணி குறித்து சரத்குமார் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பி.எல். தேனப்பனின் யூடியூப் சேனலிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

திரைப்படத் தயாரிப்பில் நீண்ட அனுபவம் கொண்ட பி.எல். தேனப்பன் இந்தக் கூட்டணியில் இணைந்திருப்பது, படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா வர்த்தக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 15 முதல் தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.