பல கெட்டப்புகளில் வடிவேலு; சந்தானம்-ஆர்யா கூட்டணியில் பேய்த்தனமாய் காமெடி

மீண்டும் காமெடிப் புயலாய் கலக்க வருகிறார் வடிவேலு. இதனைத் தொடர்ந்து, சந்தானமும் களத்தில் இறங்குகிறார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

சுந்தர்.சி இயக்கத்தில், வடிவேலு, சுந்தர்.சி, கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை ஈர்த்து சிரிக்க வைத்துள்ளது. பல வருடங்களுக்கு பிறகு வடிவேலு பல கெட்டப்புகளில் கலக்கியிருக்கிறார்.

இந்நிலையில், மே மாதம் 16-ம் தேதி சந்தானம் நடிப்பில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பேய் படமாக உருவான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த பாகமாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உருவாகிறது. இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். கெளதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்யா தயாரித்துள்ளார்.

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகர் சந்தானம், அதற்கு கேப்ஷனாக “4 பேய்களும் 4 பிரச்சினைகளும்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். கையில் கோடரி வைத்துக் கொண்டு சிக்ஸர் அடிப்பது போல போஸ் கொடுக்க, கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறும் பந்தில் மே16 என ரிலீஸ் தேதி டிசைன் செய்யப்பட்டு உள்ளது.

வடிவேலு மீண்டும் நகைச்சுவை புயலாக சீறி வரும் நிலையில், சந்தானம்-ஆர்யா கூட்டணியும் காமெடி தர்பாரை கட்டமைக்க வருவது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.