தனியாக அழுதுகொண்டே இருப்பேன்: நடிகை சானியா ஐயப்பன் ஃபீலிங்ஸ்
‘நெகட்டிவ்வான வார்த்தைகள் காயப்படுத்தும். பாஸிட்டிவ்வான வார்த்தைகள் வளர்ச்சிக்கு உதவும்’ என்பது அனைவருக்கும் பொருந்தும்தானே. அந்நிலையில்தான் கண்கலங்கி இருக்கிறார் போலும் சானியா..
அதாவது, மலையாள சினிமாவில் ‘குயின்’ படம் மூலம் அறிமுகமான 22 வயது சானியா ஐயப்பன் பிரேதம்-2, லூசிபர், சல்யூட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழிலும் இறுகப்பற்று, சொர்க்கவாசல் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், லண்டனில் உள்ள ஒரு நடிப்புப் பள்ளியில் படித்தபோது எதிர்கொண்டதை சானியா தெரிவிக்கையில்,
‘நான் லண்டனில் படிக்கச் சென்ற முதல் நாளிலிருந்தே பேராசிரியரின் நடத்தை சற்று எதிர்மறையாக இருந்ததை உணர்ந்தேன். ஆனால், நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்கள் கடந்தன, ஆனாலும், யாரும் என்னிடம் பேச முயற்சிக்கவில்லை.
ஒரு நாள் மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிய வேண்டிய நேரம் வந்தது. அப்போது யாருமே என்னை குழுவில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. முதலில், ஏன் என்று எனக்கு தெரியவில்லை,
பின்னர்தான் அது எதற்காக என்பதை உணர்ந்தேன். இதனால், எனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் அறையில் தனியாக அழுதுகொண்டே இருப்பேன்’ என ஃபீலிங்ஸாக தெரிவித்துள்ளார்.
சானியா, கடந்த 2023-ம் ஆண்டு லண்டனில் படைப்பாற்றல் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தில் நடிப்பு மற்றும் செயல்திறன் பிரிவில் 3 ஆண்டு இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தார். தற்போது பிஸியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.