முதல் நாளிலேயே இத்தனை கோடியா..? குட் பேட் அக்லி படத்தின் வசூல் கணிப்பு இதோ..!

குட் பேட் அக்லி திரை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

So many crores on the first day.. Here is the collection estimate of Good Bad Ugly..!
So many crores on the first day.. Here is the collection estimate of Good Bad Ugly..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் நேற்று டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.இது மட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் 22 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது வார இறுதி நாட்கள் என்பதால் முதல் நாளில் மட்டும் அதுவும் தமிழ்நாட்டில் 35 கோடியும் உலக அளவில் 60 அல்லது 70 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

So many crores on the first day.. Here is the collection estimate of Good Bad Ugly..!
So many crores on the first day.. Here is the collection estimate of Good Bad Ugly..!