‘ரெட்ட தல’ அருண் விஜய்க்கு ‘இட்லி கடை’ தனுஷின் ‘ஸாங்’ பார்ஷல்

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’ படத்தின் இசைப்பணி பற்றிப் பார்ப்போம்..

பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் தனுஷ் சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதனிடையே தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்திருக்கிறார். நித்யா மேனன் ஹீரோயினாகவும் அருண் விஜய் வில்லனாகவும் வருகின்றனர்.

இந்நிலையில் ‘இட்லி கடை’ படத்தில் நடித்தபோது தனுஷுக்கும் அருண் விஜய்க்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டு, இப்போது ‘ரெட்ட தல’ படத்திலும் தொடர்கிறது. அதாவது ‘ரெட்ட தல’ படத்தில் அருண் விஜய்க்காக தனுஷ், சாம் சி.எஸ் இசையில் பாடியிருக்கிறார். இப்பாடலை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

‘ரெட்ட தல’ படத்தை ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கியிருக்கிறார். இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கான இடம்தேடி போராடும் அருண் விஜய்க்கு, பாலா இயக்கிய ‘வணங்கான்’ படம் சிறந்த நடிகர் என்ற பெயரை கொடுத்தது. ‘ரெட்ட தல’ படம் அவரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!

actor dhanush song in the film starring arun vijay