உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறிய குக் வித் கோமாளி பவித்ரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறி இருக்கிறார் குக் வித் கோமாளி பவித்ரா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்காக இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் பவித்ரா. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அவருக்கு பெற்று கொடுத்தது.
ஏற்கனவே தந்தையை இழந்த பவித்ராவிற்கு கடந்த வருடம் தாயும் இறந்தது மிகப்பெரிய இழப்பாக இருந்தது. பலரும் பவித்ராவிற்கு ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அவரை லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது நடிகர் ஒருவரின் குழந்தையை பார்க்க பவித்ரா மருத்துவமனைக்கு வந்துள்ளார் அப்போது குழந்தையை கொஞ்சம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் முற்றிலுமாக உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறி இருக்கிறார் பவித்ர லக்ஷ்மி.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பவித்ராவிற்கு என்ன ஆச்சு என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
